Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பெரியார் பல்கலை. தொலைநிலைக் கல்வி மாணவர் சேர்க்கை: யு.ஜி.சி-யின் உத்தரவுக்கு இடைக்கால தடை

சேலம் பெரியார் பல்கலைக்கழகத் தொலைநிலைக் கல்வியில் 2015-16-ஆம் ஆண்டு மாணவர் சேர்க்கை கூடாது என்று பல்கலைக்கழக மானியக் குழு (யு.ஜி.சி) பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிதது சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது
.இது தொடர்பாக பல்கலைக்கழகப் பதிவாளர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்:

2001-02-ஆம் ஆண்டில் தொலைதூரக் கல்வி தொடங்கப்பட்டது. இதில், பல்வேறு துறைகளில் 150 பாடப் பிரிவுகள் நடத்தப்படுகின்றன. இந்த நிலையில், 2015-16-ஆம் கல்வியாண்டில் தொலைநிலைக் கல்வியில் மாணவர்களைச் சேர்க்கக் கூடாது என்று ஆகஸ்ட் 27-இல் யு.ஜி.சி. உத்தரவிட்டது. இதற்கு தடை விதிக்காவிட்டால், ஆயிரக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்படுவர்.எனவே, உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிப்பதோடு, ரத்து செய்ய வேண்டும் என்றுகோரப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், யு.ஜி.சி. பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார்.




1 Comments:

  1. அன்பு நண்பர்களுக்கு வணக்கம், நம் அன்பு சகோதர , சகோதரிகளின் பெறு முயற்சியால் வரும் 16.11.15 அன்று கவன ஈர்ப்பு உண்ணா விரதம் நடத்த அனுமதி பெற்றுள்ளனர். அவர்களுக்கு அனைத்து நல உள்ளங்களின் சார்பில் நன்றி .

    அன்று மாண்புமிகு கல்வி அமைச்சர், இயக்குனர் , கல்வி துறை , செயலர் , கல்வித்துறை. தலைமை செயலாளர் ஆகியோரிடம் மனு தர முடிவு செய்ய பட்டுள்ளது. அனைவரும் அறிந்த ஒன்று, நம் தற்போது வாழ்வின் விளிம்பில் உள்ளோம். எனவே அனைவரும் குடுமம் மற்றும் நண்பர்களுடன் வந்து சேருங்கள். இது நமது கடைசி போராட்டம். ஒன்று பட்டால், உண்டு வாழ்வு. நம் நண்பர்கள் அனைவருக்கும் பகிரவும். பயண செலவுக்கு பணம் இல்லாத நண்பர்களை , பணம் இருக்கும் நண்பர்கள் பணம் போட்டு அழைத்து வரவும் . என்றென்றும் அன்புடன் . தகடூர் தனபால்

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive