Public Exam Question Bank For Sale

Public Exam Question Bank For Sale

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பத்து வயதில் 400 ற்கும் மேற்பட்ட மொழிகளிகளில் படிப்பதற்கும், எழுதுவதற்கும் சாதனை

         பத்து வயதில் 400 ற்கும் மேற்பட்ட மொழிகளிகளில் படிப்பதற்கும், எழுதுவதற்கும், டைப் ரைட்டிங் செய்தும் தன் திறமையை வெளிகாட்டி, புதிய உலக சாதனை செய்து “World Youngest Multilingual Typist” என்ற பட்டத்தை பெற்ற சாதனையாளர் அக்ரம்.

        தமிழ்நாடு, இராமநாதபுர மாவட்டம், அபிராமம் கிராமத்தை பூர்விகமாக கொண்டவரும், தற்போது சென்னையில் வசித்து வரும் மொழிப்பிரியன் அவர்களின் மகன் அக்ரம்.


பத்து வயதே ஆகியுள்ள இச்சிறுவன், உலக இளம் வயது தட்டச்சு சாதனையாளன் (World Youngest Multilingual Typist ) என்ற அவார்டை பெற்றுள்ளான். பல மொழிகளின் ஆற்றலையும் தனது 7 வயது முதல் கற்று வந்துள்ளான். இந்திய,வெளிநாட்டு மற்றும் பழங்கால கல்வெட்டு மொழிகளை கற்று, 400 ற்கும் மேற்பட்ட மொழிகளிகளில் படிப்பதற்கும், எழுதுவதற்கும், டைப் ரைட்டிங் செய்வதற்கும் www.seithiula.blogspot.in  பயிற்சி எடுத்துள்ளான். 400 மொழிகளில் வேகமாக டைப்பிங் செய்யும் அபாரத் திறமையின் மூலம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறான்.
இதோடு மட்டுமில்லாமல் இந்தியாவின் தேசிய கீதமான ”ஜன கண மன” வை சுமார் 40 மொழிகளில் பார்க்காமல் 2 மணி நேரத்தில் எழுதி முடித்து விடுகிறார்

சுமார் 40 மொழிகளில் பார்க்காமல் 2 மணி நேரத்தில் எழுதி முடித்து விடுகிறார்  இச்சிறுவனுக்கு இந்திய, வெளிநாட்டு மொழிகளான அரபிக், அச்செனிஸ், ஆப்ரிக்கன்ஸ், அல் பேனியன், அமசைக், அம்ஹரிக், ஆர்மீனியன், அஸென்தெ டிவி, அஸ்ஸாமிஸ், அஸெர்பைசைனி, பஹஸ பூஹிஸ், பஹஸ மதுர, பாலினிஸ், பலூச்சி, பவ்லே, பாஷ்கிர், பாஸ்கியூ, பஸ்ஸா, பத்தகீஸ், பெலருஷ்யன்,பெம்ப, பெங்காலி, பெத், பிக்கலோனா, பொஸ்னின், பிராகுய், பல்கேரியன், பர்மீஸ், கேஸ்டீலியன். கட்டலன், சிபூவானோ, சென்ட்ரல் குர்தீஷ், சத்தீஷ்கரி, செஷன், செரோக்கீ, சிச்சோவா, சைனீஷ் ஸிம்லிபைடு, சைனீஷ் ட்ரெடிஷ்னல், சியாவோ, சுவாஷ், கிரிலோ, குரோஷன், செக், டாக்பனி, டேனிஷ், தரி, திவிஹி, டோக்ரி, டசூன், டச், ஸோங்கா, ஈஸ்ட் இனிக்ட்யுட், எஜிப்ஸியன் ஹைரோகிளிப், இங்கிலீஷ், இஷ்பெரான்டோ, இஸ்தோனியன், ஈவ், ஃபேன்தே, ஃபிஜியன், ஃபிலிப்பினோ, ஃபினிஷ், ஃப்ரன்ச், ஃபுளா, கா, களிசியன், ஜோர்ஜன், ஜெர்மன், கஜரியா, ஜெக், கிரந்த, கிரீக், குஜராத்தி, ஜிப்ஜி, ஹேஷன் கிரியோ, ஹவ்ஸ, ஹீப்ரு, ஹிந்தி, மாங்க் டவ், ஹங்கேரியன். ஐஸ்லேனிக், ஈபோ, ஐலோகனோ, இந்தோனிசியன், இனிக்ட்யுட் ஆர்க்டிக், ஈரானுன், ஐரிஷ், இட்டாலியன், ஜப்பானிஷ். ஜாவானிஷ், ஜுலா, கபிலீ, கன்னட, கஷ்மிரீ, கட்டலன், கஸக், கென்யா லுவோ. கெமர், கிக்கம்பா, கிக்காங்கோ, கிக்கியூ, கின்யார்வன்டா, கிளிங்ஆன், கொரியன், கெப்பல், குர்தீஷ், கட்ச்சி, கிர்கீஷ், லம்பாடி, லவ், லத்தீன், லத்தீவன், லெப்ச, லிம்பூ, லிங்கள, லிஷு, லித்துனியன், லுகன்டா, மெஸிடோனியன், மலகஸி, மலாய், மலையாளம், மால்டீஸ், மன்ச்சூ, மந்தர், மந்தின்க, மணிப்பூரி, மரான்னவ், மராட்டி, மெந்தி, மங்கோலியன், நேபாலி, நாக்கோ, நோர்விஜியன். நிஜிமா, ஒக்சிடன். ஒரியா, உருமூ, ஒஸ்ஸஷன், பஷ்தோ, பெர்சியன். பொனிசியன், பொலிஷ், போர்ச்சுகீஷ், புலார், பஞ்சாபி, ரோஹிங்யலிஷ், ரொமானியன், ருஷ்யன், ஸாமோன், ஸான்ஸ்கிரிப்ட், ஸரைக்கீ,ஸ்கோட்ஸ், ஸெர்பியன். ஸெஸத்தோ, ஷோனா. ஸிந்தி, ஸிங்கள, சுலோவக், சுலோவனியன். ஸோமாலி, ஸ்பானிஷ், சுன்டாநீஷ், சுராநன், ஸ்வாஹிலி, ஸ்விடீஷ், சிரியக், தகலோக், தஜிக், தமசைத், தமிழ், தமிழ் பிராமி, தத்தர், டி ரியோ மாயூரி, தெலுகு, டெம்னே, தாய், திபெத்தியன், டைக்ரின்யா, டோங்கன், டோஸ்க், துர்கிஷ், துர்க்மென், துவலு, உக்ரனியன். உருது, உய்குர், உஸ்பெக், வாய், வியட்னாமிஷ், வாலி, வெல்ஷ், வெஸ்ட் இனிக்ட்யூட், வெஸ்டன் பஞ்சாப், உல்ப், கோஸா, யாவோ, யிதிஷ், யிரோபா, ஸஜக்கி, ஜுலூ போன்ற மொழிகள் தெரியும்.


கடந்த வருடம் 2014, இந்தியாவின் Unique World Records” என்ற நிறுவனத்தினர் மஹ்மூத் அக்ரமின் அபாரத்திறமையை அறிந்து, அவருகளுடைய வேர்ல்டு ரிக்கார்டு கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடப்பட்டு இருந்தது. அதன்படி மஹ்மூத் அக்ரம் கலந்து கொண்டு, பல VIP க்கள் முன்னிலையில் தன் திறமையை வெளிகாட்டி, புதிய உலக சாதனை செய்து “World Youngest Multilingual Typist” என்ற பட்டத்தை பெற்றார்.


இந்தியாவில் உள்ள பல மீடியாக்களும். வளைகுடா நாட்டில் உள்ள மீடியாக்களும் பாராட்டி உள்ளனர்.
கடந்த வருடம் 2015, இந்தியாவின் India book of Record-TamilNadu book of Record-Asia book of Record என்ற குழுவின் (www.seithiula.blogspot.in) நிறுவனத்தினர் ”சாதனை தமிழகம் 2015” என்ற நிகழ்ச்சியில் தன்னுடைய திறமையை வெளிகாட்டுமாறு அழைப்பு விடப்பட்டிருந்தது. அதில் கலந்து கொண்டு ”In the Name of God, the Merciful, the compassionate” என்ற வாக்கியத்தின் 200 மொழிகளின் மொழிப்பெயர்ப்பை 1 மணி நேரம் 30 நிமிடங்களில் டைப்பிங் செய்து புதிய உலக சாதனை செய்துள்ளான்.
அது போல முஸ்லிம்களின் வேத நூலான குர்ஆனின் முதல் அத்தியாயமான ”சூரா பாத்திஹாவை” கிட்டத்தட்ட 180 மொழிகளின் மொழிபெயர்ப்பில் 8 மணி நேரம் தொடர்ந்து டைப்பிங் செய்து சாதனை செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவனுடைய அறிவாற்றலை பற்றியும், இவனுக்கு எப்படி ஆர்வம் என்பது பற்றியும், இவனுடைய தந்தை அப்துல் ஹமீது கூறும் பொழுது,
ஒரு நாள் நான் ஆங்கிலத்தில் டைப்பிங் செய்து கொண்டு இருக்கும் பொழுது, என் பையன் அதை பார்த்து கொண்டு இருந்தான். அப்பொழுது அவனுக்கு வயது 7. எனக்கும் டைப்பிங் கற்றுக் கொடுக்குமாறு கேட்டான். சும்மா நச்சரிக்கிறானே என்று தான் கற்றுக் கொடுத்தேன். அன்றே கற்றுக் கொண்டு வேகமாக டைப்பிங் செய்ய ஆரம்பித்து விட்டான்.

நான் இங்கிலீஷ் டைப்பிங் கற்றுக் கொள்வதற்காக, டைப்பிங் சென்டர் போய் சரளமாக டைப்பிங் செய்வதற்கு www.seithiula.blogspot.in கிட்டத்தட்ட 6 மாதம் ஆகிவிட்டது. இவன் ஒரு 6 மணி நேரத்தில் டைப்பிங் பழகி விட்டானே என்று எனக்கு ரொம்ப ஆச்சரியமாக இருந்தது. ஒரே நாளில் ஒரு நிமிடத்திற்கு 50 வார்த்தைகள் என்று வேகமாக டைப்பிங் செய்ய ஆரம்பித்த்து மிக மிக வியப்பான விஷயமாக இருந்தது.
அடுத்த நாள் அவனை டெஸ்ட் செய்வதற்காக அரபிக் மொழியை கற்றுக் கொடுத்து, டைப்பிங் செய்ய வைத்தேன். என்ன ஆச்சரியம்! ஒரே நாளில் சரளமாக டைப்பிங் செய்ய ஆரம்பித்து விட்டான்.
அன்று தான் முதன் முதலில், அவனுடைய மொழி ஆற்றலை உணர்ந்து கொண்டேன். படிப்படியாக ஹீப்ரு, மலையாளம், உருது, தெலுகு. ஹிந்தி என்று ஆரம்பித்தேன். அவனும் மிக ஆர்வமாக எல்லா மொழிகளை கற்றுக் கொண்டான். அது மட்டுமில்லாமல் வேகமாக டைப்பிங் செய்யவும் ஆரம்பித்தான். இதற்கிடையில் நான் வேலைக்காக வளைகுடா நாட்டிற்கு சென்று விட்டேன். அங்கு போனாலும் என்னை விடவில்லை. பிறகு அங்கிருந்து அவனுக்கு ஸ்கைப் வீடியோ மற்றும் இமெயில் மூலமாக கற்றுக் கொடுத்து வந்தேன். அவனாகவே அதை புரிந்து கொண்டு (self taught) கற்று கொண்டான்.
எந்த ஒரு மொழியையும் அவனுக்கு கற்றுக் கொடுப்பதற்கு நான் முதலில், அம்மொழியின் எழுத்துக்களை கற்றுக் கொடுப்பேன். பிறகு எப்படி உச்சரிக்க வேண்டும்  என்றும் வாக்கியங்களை வாசிக்கவும் சொல்லி கொடுப்பேன். கடைசியில் தான் டைப்ரைட்டிங் செய்வதற்கு கற்றுக் கொடுப்பேன்.

எனக்கு உலக மொழிகளில் 14 மொழிகளில் படிப்பதற்கும், எழுதுவதற்கும், பேசுவதற்கும் மற்றும் டைப்ரைட்டிங் செய்வதற்கும் தெரியும் என்பதால் அத்தனையும் சொல்லி கொடுத்து விட்டேன். ஆனாலும் மேலும் மேலும் வேற மொழியை கற்கணும் என்ற (www.seithiula.blogspot.in) ஆர்வத்தால் மறுபடியும் என்னை நச்சரிக்க தொடங்கவிட்டான். கடைசியாக நான் இவனுக்காக என்னுடைய நேரத்தை ஒதுக்கி நான் ஒவ்வொரு புதிய மொழிகளையும் கற்று கொண்டு, சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தேன்.

பல மொழிகளை டைப்பிங் செய்யும் பொழுது எனக்கே குழப்பம் வரும். உதாரணத்திற்கு மலையாளத்தில் டைப்பிங் செய்யும் பொழுது தமிழின் கீ போர்டு டைப்பிங் உரிய பட்டன் மாறி விடும். ஆனால் எந்த வித குழப்பம் இல்லாமல் டைப்பிங் செய்கிறான். இவனுக்காக நான் 400 மொழிகளை கற்றுக் கொண்டேன் ஆனால் எனக்கு அந்தந்த மொழிகளில் 50 சதவீதம் தான் என்னால் ஞாபகம் வைக்க முடிகிறது. ஆனால் இவன் எல்லாவற்றையும் தெளிவாக மூளையில் பதிந்து வைத்திருக்கிறான் என்றால் நிச்சயம் இது கடவுள் அவனுக்கு கொடுத்திருக்கும் பரிசாகும்.
ஒரு மொழியை பேசுவது என்பது எளிது. அந்த மொழியை பேசுவர்களிடம் நாமும் பேசி கொண்டு இருந்தால் அம்மொழியை பேசி விடலாம். அந்த மொழியை படிப்பது, எழுதுவது, டைப்பிங் செய்வது என்பது மிக மிக கடினம். ஆனால் 400 மொழிகளை கற்பது என்பது சாதாரண விஷயமல்ல.

சாதாரணமாக ஒரு மொழியை டைப்ரைட்டிங் செய்வது என்பது எளிதல்ல. எந்த மொழியையும் நாம் டைப்ரைட்டிங்  செய்வதற்கு முன்னால் உயிர் எழுத்துகள், மெய் எழுத்துக்கள் மற்றும் கூட்டெழுத்துக்கள்  அதனுடைய குறிகளில் அனைத்தையும் கற்று இருக்க வேண்டும்.
அடுத்ததாக கம்ப்யூட்டர் கீ போர்டில் ஒவ்வொரு மொழிக்கும் ஒவ்வொரு மொழியின் கீ போர்டு எழுத்து மாறுபடும். உதாரணத்திற்கு இங்கிலீஷ் கீ போர்டில் ”u” என்று எழுத்து உள்ளது. அந்த பட்டனை நாம் தமிழ் கீபோர்டில் பிரஸ் செய்தால் ”ர” என்று வரும். இதே எழுத்து பட்டனை நாம் அரபிக் கீ போர்டில் பிரஸ் செய்தால் அரபிக் எழுத்தான ”அயின்” என்று வரும். இதே எழுத்து பட்டனை நாம் ஹிந்தி கீ போர்டில் பிரஸ் செய்தால் ஹிந்தி எழுத்தான ”ஹ” என்று வரும். www.seithiula.blogspot.in இப்படி ஒவ்வொரு மொழிக்கும், அதனுடைய எழுத்து மாறுபடும். இதில் குழப்பம் இல்லாமல் மிக தெளிவாக அதற்குரிய கீயை அழுத்த வேண்டும் இதுவும் சாதாரண விஷயம் அல்ல.

அதிலும் அந்தந்த மொழிகளை கம்ப்யூட்டரில் யுனிக்கோட் முறையில் வேகமாக தட்டச்சு செய்வது மிக மிக ஆச்சரியமாகும். இது மட்டுமில்லாமல் பழங்கால கல்வெட்டு மொழிகளையும் கற்று, அதையும் தட்டச்சு செய்வது இன்னும் ஆச்சரியத்தை அதிகப்படுத்துகிறது.
எகிப்தியர்களின் பிரமிடை பற்றி நாம் அனைவரும் அறிந்ததே. அந்த பிரமிடில் பொறிக்கப்பட்டிருக்கும் சித்திர எழுத்துக்களை கற்றுக்கொண்டு டைப்பிங் செய்கிறான். அதே போல கி.மு 3 ஆம் நூற்றாண்ட்டை சேர்ந்த அசோக மன்னரின் சாரநாத் கல்தூணை நாம் வரலாற்றில் படித்திருப்போம். அந்த கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ள பிராமி எழுத்துக்களை கற்றுக்கொண்டு டைப்பிங் செய்கிறான். அதே போல கி.பி. 5 ஆம் நூற்றாண்டின் தமிழின் முந்தைய எழுத்து வடிவமான கிரந்த எழுத்துக்களை கற்றுக் கொண்டு டைப்பிங் செய்கிறான். கிறிஸ்துவ இயேசுவின் தாய்மொழியாக கருதப்படுகிற அரமேயம்(Armaic) மொழி 3000 ஆண்டு பழைமையக் கொண்டது. இதையும் கற்றுக் கொண்டு டைப்பிங் செய்கிறான்.

இதோடு முடியவில்லை. தாமாக சிந்தித்து ஒரு புதிய மொழியின் எழுத்துக்களை அனைவரும் எளிதாக கற்றுக் கொள்ளும் வகையில் வடிவமைத்து உள்ளான். அதை தந்தையாகிய நான் கம்ப்யூட்டரில் அந்த புதிய மொழியின் எழுத்துக்களை டைப்பிங் செய்த ஏதுவாக, ஃபாண்ட்டாக வடிவமைத்துள்ளேன். அந்த புதிய எழுத்திற்கு ”அத்தா ஸ்கிரிப்ட்” என்றும் பெயரிடப்பட்டுள்ளது.
தமிழ் மொழியை பொறுத்தவரை மொத்தம் 247 எழுத்தாக இருந்தாலும், வட மொழியையும் சேர்த்து 299 எழுத்துக்கள் உள்ளன். ஆக ஒருவர் தமிழில் டைப்பிங் செய்யணும் என்றால், 299 எழுத்துக்கள் நன்றாக மூளையில் பதிந்திருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் நாம் மிக வேகமாக பிழையில்லாமல் தமிழில் டைப்பிங் செய்ய இயலும். தமிழை தவிர்த்து, பிற இந்திய மொழிகளில், உயிர், மெய், மற்றும் கூட்டெழுத்துக்கள் சேர்த்து, ஏறத்தாழ 500 க்கு மேல் வருகிறது. இன்னும் சில மொழிகளான சீன மொழி போன்றவற்றில் 50000 எழுத்துக்கள் உள்ளன. இந்த வகையில் நாம் ஆராய்ந்தால், 400 மொழிகளின் எழுத்துக்களை நாம் கூட்டுவோம் என்றால் ஒரு லட்சம் எழுத்துக்கள் மூளையில் மிக தெளிவாக பதிந்திருந்தால் மட்டும் டைப்பிங் இத்தனை மொழிகளில் செய்ய முடியும்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

Blog Archive