கல்லூரி, பல்கலையில் 'குரூப் - 4' தேர்வு மையம் : 'குரூப் - 4' தேர்வுக்கு ஏற்பாடு

தமிழக அரசு அலுவலகங்களில், குரூப் - 4 பதவிகளில் காலியாக உள்ள, 9,351 இடங்களை நிரப்ப, பிப்., 11ல், போட்டி தேர்வு நடக்கிறது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., இந்தத் தேர்வை நடத்துகிறது. தேர்வுக்கான, 'ஆன்லைன்' பதிவு, நேற்று முன்தினம் முடிந்தது.
இதில், 20.௮௩ லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர். இவர்களில், ௧௧.௩௪ லட்சம் பேர் பெண்கள், ௫௪ பேர் மூன்றாம் பாலினத்தவர். நேற்றுடன், தேர்வு கட்டணம் செலுத்தும் அவகாசமும் முடிந்தது. இதுவரை நடந்த, வி.ஏ.ஓ., என்ற, கிராம நிர்வாக அதிகாரி பதவிக்கான தனித் தேர்வு, இந்த ஆண்டு முதல், ரத்து செய்யப்பட்டு, குரூப் - 4 தேர்வுடன் இணைக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், இந்தியாவில் எந்த தேர்வுக்கும் இல்லாத வகையில், தமிழக, குரூப் - 4 தேர்வில், 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பதிவு செய்ததால், தேர்வுக்கான மையங்களை இரட்டிப்பாக்க, டி.என்.பி.எஸ்.சி., முடிவு செய்துள்ளது. இதுவரை, அதிகபட்சம், 15 லட்சம் பேருக்கு, 4,500 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. ஆனால், இம்முறை வழக்கத்தை விட, ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்டோர் அதிகமாக விண்ணப்பித்து உள்ளதால், கூடுதலாக, 1,500 மையங்கள் அமைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அரசு, தனியார் கல்லுாரிகள் மற்றும் பல்லைகளிலும், தேர்வு மையங்கள் அமைக்க, டி.என்.பி.எஸ்.சி., திட்டமிட்டுள்ளது.
'விண்ணப்பங்களின் நிலையை, www.tnpsc.gov.in என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்' என, டி.என்.பி.எஸ்.சி., செயலர், விஜயகுமார் அறிவித்துள்ளார்.
0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive