பிளஸ் 2 வகுப்பு செய்முறை தேர்வு: பிப்.2ல் துவக்கம்

பிளஸ் 2 மாணவர்களுக்கு, வரும், 2ம் தேதி முதல், பிப்., 16க்குள் செய்முறை 
தேர்வை நடத்தி முடிக்க, தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழக பாடத்திட்டத்தில், பிளஸ் 2 மாணவர்களுக்கான பொது தேர்வு, 
மார்ச், 1ல் துவங்குகிறது. இதில், ஒன்பது லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர்.
தேர்வுக்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்நிலையில், 
பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வு, அடுத்த வாரம் துவங்குகிறது.
வரும், 2ம் தேதி முதல், அனைத்து பள்ளிகளிலும், செய்முறை தேர்வை 
துவங்கி, பிப்., 16க்குள் முடித்து, மதிப்பெண் பட்டியலை தாக்கல் செய்ய,  தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. தேர்வை முறைகேடின்றி நடத்துமாறு,  தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Share this