வங்கியில் ரூ.2,410; கையில் ரூ.1,520... முதல்வரின் சொத்து இது!

 திரிபுரா முதல்வர், மாணிக் சர்க்கார், தன் வங்கிக் கணக்கில், 2,410 ரூபாயும், கையிருப்பாக, 1,520 ரூபாயும் இருப்பதாக, தேர்தல் கமிஷனிடம் வழங்கி உள்ள சொத்து கணக்கில் குறிப்பிட்டு உள்ளார்.


முடிவு

வட கிழக்கு மாநிலமான, திரிபுராவில், முதல்வர் மாணிக் சர்க்கார் தலைமையில், மார்க்.கம்யூ., ஆட்சி நடக்கிறது. தொடர்ந்து, 20 ஆண்டுகளாக, திரிபுராவின் முதல்வராக, இவர் பதவி வகிக்கிறார்.

திரிபுராவில், 18ல், சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. மார்ச், 3ல், ஓட்டுகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.இந்நிலையில், தன்பூர் சட்டசபை தொகுதியில் போட்டியிடும், முதல்வர் மாணிக் சர்க்கார், தன் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

அதில், அவர் குறிப்பிட்டுள்ள சொத்து விபரங்களை பார்த்து, பலரும் ஆச்சரியம் அடைந்தனர்.மாணிக் சர்க்கார், தன் வங்கிக் கணக்கில், 2,410 ரூபாயும், கையிருப்பு தொகையாக, 1,520 ரூபாயும் வைத்திருப்பதாக குறிப்பிட்டு உள்ளார். 2013 சட்டசபை தேர்தலின் போது தாக்கல் செய்த சொத்து விபரத்தில், வங்கிக் கணக்கில், 9,720 ரூபாய்வைத்திருந்ததாக குறிப்பிட்டு இருந்தார்.

மத்திய அரசு ஊழியர் முதல்வராக ஆட்சியில் இருந்த போதும், ஐந்து ஆண்டுகளில், அவரது வங்கி சேமிப்பு, 7,310 ரூபாய் குறைந்துள்ளது. மேலும், அவருக்கு சொந்தமாக வாகனம்எதுவுமில்லை என்றும் குறிப்பிட்டு உள்ளார்.


மாணிக் சர்க்காரின் மனைவி, பாஞ்லி பட்டாசார்ஜி, மத்திய அரசு ஊழிய ராக பணியாற்றினார்.

அவரிடம், 20 ஆயிரத்து, 140 ரூபாய் கையிருப்பாகவும், 12 லட்சம் ரூபாய் வங்கி சேமிப்பாக இருப்பதாகவும், 20 கிராம் தங்க நகைகள் வைத்து உள்ளதாகவும், அந்த மனுவில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

Share this