தேர்தல் கமிஷனர்களுக்கு இருமடங்கு சம்பள உயர்வு!!!

 உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு அடுத்தபடியாக, தேர்தல் ஆணையர்களின் சம்பளமும், இரண்டு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது.


தலைமை தேர்தல் ஆணையம், ஒரு தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் இரண்டு தேர்தல் ஆணையர்கள் தலைமையின் கீழ் இயங்கி வருகிறது; இவர்களுக்கு மாதம், 90 ஆயிரம் ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டு வந்தது. தற்போது, இந்த சம்பளம், இரண்டு மடங்கிற்கு சற்று குறைவாக உயர்த்தப்பட்டுள்ளது.இதையடுத்து, தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் இரண்டு தேர்தல் ஆணையர்களும், இனி, மாதம் தோறும், 2.50 லட்சம் ரூபாய், சம்பளமாக பெறுவர். 'தலைமை தேர்தல் ஆணையரின் சம்பளம், உச்ச நீதிமன்ற நீதிபதியின் சம்பளத்துக்கு நிகராக இருக்க வேண்டும்' என, தேர்தல் ஆணைய சட்டத்தில் உள்ளது.உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளின் சம்பளம், சமீபத்தில் இரண்டு மடங்காக உயர்த்தப்பட்டது. இதையடுத்து, தேர்தல் ஆணையர்களின் சம்பளமும் இப்போது உயர்த்தப்பட்டுள்ளது

Share this

0 Comment to "தேர்தல் கமிஷனர்களுக்கு இருமடங்கு சம்பள உயர்வு!!!"

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...