கல்வித்துறை மேம்பாட்டுக்கான அறிவிப்புகள் வரவேற்கத்தக்கது.. சொல்கிறார் செங்கோட்டையன்!

கல்வித்துறை மேம்பாட்டுக்கான அறிவிப்புகள் வரவேற்கதக்கது என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.


மத்திய அரசின் பொது பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் அருண் ஜேட்லி பொது பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார்.

பட்ஜெட் குறித்து எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. இந்நிலையில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது கல்வித்துறை மேம்பாட்டுக்கான அறிவிப்புகள் வரவேற்கத்தக்கது என அவர் கூறினார். செஸ் வரி உயர்வு என்பது பரிசீலிக்கப்பட வேண்டிய ஒன்று என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மேலும் பட்ஜெட் குறித்து முதல்வரிடம் தான் கேட்கவேண்டும் என்றும் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

Share this