ஆராய்ச்சியாளர்கள் கருத்து! ஆய்வில் அதிசய தகவல் !

ஆராய்ச்சியாளர்கள் கருத்து ,பால்வெளி அண்டத்தில் புதிதாக கண்டு பிடிக்கப்பட்ட 7 கோள்களில் தண்ணீர் இருப்பு மற்றும் உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறு இருப்பதாக கருதுகின்றனர்.

சூரியக்குடும்பம் உள்ள இதே பால்வெளி அண்டத்தில் பூமியிலிருந்து சுமார் 40 ஒளியாண்டுகள் தூரத்தில் திராப்பிஸ்ட்-1(Trappist-1) எனும் கோள்களின் குடும்பம் கடந்த 2015ல் கண்டறியப்பட்டது. இக்கோள்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வரும் விஞ்ஞானிகள், இவற்றில் பூமியில் இருப்பதைப் போன்றே பாறைகள், நீர் உள்ளிட்டவை இருக்கலாம் என தங்களின் ஆய்வுக்கட்டுரையில் தெரிவித்துள்ளனர்.
பூமி தனது ஒட்டு மொத்த நிறையில் 0.02 விழுக்காடு நீரைக் கொண்டுள்ள நிலையில்,திராப்பிஸ்ட் -1 (Trappist-1) கோள்கள் 5 விழுக்காடு நீரைக் கொண்டிருக்கலாம் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர். உயர் உறைநிலையில் உள்ள தண்ணீர், வாயுநிலையிலோ அல்லது, பனிக்கட்டிகளாகவோ இருக்கலாம் என்பது விஞ்ஞானிகளின் ஊகமாக உள்ளது. தண்ணீர் இருப்பதால் திராப்பிஸ்ட் -1(Trappist-1) கோள்களில் உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியங்களையும் மறுப்பதற்கில்லை என பிர்மிங்ஹாம் பல்கலை கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Share this

0 Comment to "ஆராய்ச்சியாளர்கள் கருத்து! ஆய்வில் அதிசய தகவல் !"

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...