பிரிட்டனில் கணக்கு போட்டி; இந்திய மாணவி சாதனை!!!

உலகளவில்  நடைபெற்ற, 'ஆன் லைன்' கணித புதிர் போட்டியில், சிறப்பாக தேர்ச்சி பெற்ற, முதல், 100 பேரில் ஒருவராக, இந்திய வம்சாவளி மாணவி, சோஹினி தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர், சோஹினி ராய் சவுத்ரி, 8. இவரது தந்தை, மாய்னக் ராய் சவுத்ரி, பிரிட்டனில் உள்ள, லண்டன் நகரில், கணக்கராக பணிபுரிகிறார். பல ஆண்டுகளாக, இவரது குடும்பம் பிரிட்டனில் வாழ்ந்து வருகிறது. இங்கு, பிர்மிங்கம் நகரில் உள்ள, நெல்சன் ஆரம்பப் பள்ளியில் படிக்கும் சோஹினி, கணக்கு பாடத்தில் ஆர்வம் கொண்டவர்.

ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்காகவே, பிரிட்டனில், ஆன் லைன் கணித புதிர் போட்டி நடத்தப்படும். ஒரே நேரத்தில், உலகம் முழுவதிலும் இருந்து, மாணவர்கள் இதில் பங்கேற்பர். இணையம் மூலம், ஆன்லைனில் கேட்கப்படும் கடினமான கணித புதிர்களுக்கு, சரியாகவும், அதே நேரத்தில் விரைவாகவும் பதிலளிக்க வேண்டும்.

இந்த போட்டியில் பங்கேற்று, மின்னல் வேகத்தில் சரியான விடைகளை சொல்லி, உலகளவில் சிறந்த, 100 பேரில் ஒருவராக, சோஹினி தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.

Share this