விருதுநகர் அங்கன் வாடியில் படிக்கும் கலெக்டர் மகள்

விருதுநகர்:விருதுநகர் கலெக்டர் சிவஞானம், தனது மகள் ரித்திஷாவை
நகராட்சி பள்ளி அங்கன்வாடி மையத்தில் சேர்த்துள்ளார்.விருதுநகர் பாவாலி ரோட்டில் உள்ள நகராட்சி பள்ளி அங்கன்வாடி மையத்தில், கலெக்டர் சிவஞானம் தனது மகள் ரித்திஷா, 3, வை சேர்த்துள்ளார். நேற்று மகளுடன் கலெக்டர் பள்ளிக்கு வந்தபோது தான், ரித்திஷா குறித்து அனைவருக்கும் தெரிந்தது. 'இது குறித்து தகவல் வெளியாவதை கலெக்டர் விரும்பவில்லை,' என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Share this