NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

கோடை விடுமுறை துவக்கம் : முட்டை கொள்முதல் விலை சரிவு

 பள்ளிகளுக்கு, கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், சத்துணவு முட்டைகள் தேக்கம் அடைந்து, கொள்முதல் விலை சரிந்துள்ளது.
நாமக்கல், தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு ---- நெக் - நிர்ணயிக்கும் விலைக்கே முட்டை கொள்முதல் செய்யப்படுகிறது. ஏப்., 16ல், 360 காசு என, கொள்முதல் விலைநிர்ணயம் செய்யப்பட்டது.ஆழ்கடலில் மீன்பிடி தடைக் காலம் அமலுக்கு வந்ததால், விலை உயர்ந்து வந்த நிலையில், தற்போது, 10 காசு சரிந்துள்ளது.
பண்ணையாளர்கள் சிலர் கூறியதாவது: நாமக்கல் மண்டலத்தில், வெயில் காரணமாக, தினமும், 15 சதவீதம் முட்டை உற்பத்தி சரிந்து வருகிறது. ஆழ்கடலில் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனால், தமிழகத்தில், முட்டை கொள்முதல் விலை உயர்ந்து வந்தது.இந்நிலையில், பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டதால்,சத்துணவுக்கு வினி யோகம் செய்யப்படும் முட்டைகள் தேங்கியுள்ளன. இதனால், கொள்முதல் விலையை குறைக்கவேண்டிய நிலைக்கு பண்ணையாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர். இது, மேலும் குறைய வாய்ப்பு உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive