பிளஸ்1 வகுப்புக்கு 3 விதமான கம்ப்யூட்டர் புத்தகம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனால் பணிச்சுமை அதிகரிப்பால் கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்
தமிழகத்தில் இந்த ஆண்டு பிளஸ்1 வகுப்புகளுக்கு புதிய பாடதிட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
ஒவ்வொரு பாடத்தின், புதிய பாடதிட்ட புத்தகங்கள் அதிக பக்கங்களை கொண்டதாகவும், தரமாக இருப்பதாக ஆசிரியர்கள் கூறி வருகின்றனர்
அதன்படி பிளஸ்1 வகுப்புக்கு இந்த ஆண்டு 3 விதமான கம்ப்யூட்டர் பாடபுத்தகங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
கணிதம், கம்ப்யூட்டர் பிரிவுக்கு கம்ப்யூட்டர் அறிவியல் தொடர்பான பாடங்கள், கலைப்பிரிவுக்கு கம்ப்யூட்டர் பயன்பாடுகள், தொழிற்கல்வி பிரிவுக்கு கம்ப்யூட்டர் தொழில்நுட்பம் தொடர்பான பாடங்களும் இடம்பெற்ற புத்தகங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது
இதற்கு முன் பிளஸ்1, பிளஸ்2 வகுப்புக்கு ஒரே மாதிரியான புத்தகங்கள் தான் இருந்தது
தற்போது அது 3 ஆக மாற்றப்பட்டுள்ளது. தொழிற்கல்வி பிரிவில் உள்ள 2 செய்முறை பாடத்தில் ஒரு பாடம் நீக்கப்பட்டு, அதற்கு பதில் கம்ப்யூட்டர் புதியதாக சேர்க்கப்பட்டுள்ளது. இதனால் கம்ப்யூட்டர் ஆசிரியர்களுக்கு பணிச்சுமை அதிகரித்துள்ளதாக தெரிவித்தனர்.
Yes..
ReplyDelete