பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்: 24.7.2018

திருக்குறள்

செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது.
விளக்கம்:
ஒருவருக்கு ஒரு நன்மையும் நாம் செய்யாத போதும், அவர் நமக்கு உதவினால், அதற்குக் கைமாறாக நாம் மண்ணுலகையும் விண்ணுலகையும் கொடுத்தாலும் சமம் ஆகாது.
பழமொழி
A friend in need is a friend indeed.
அன்புமிக்க நண்பனை ஆபத்தில் அறிவாய்
பொன்மொழி
தோல்வியைக் கண்டு அஞ்சாதே!
         - விவேகானந்தர்
இரண்டொழுக்க பண்பாடு
1.இயலாதோரைப் பார்த்து ஏளனம் செய்யாமல், அவர்களுக்கு என்னால் இயன்ற உதவியை செய்வேன்.

2. எதையும் மூடநம்பிக்கையுடன் ஏற்காமல், அறிவியல் மனப்பான்மையுடன் ஆராய்வேன்.
பொதுஅறிவு
1.நீராவியில் ஓடும் படகைக் கண்டுபிடித்தவர் யார்?
ராபர்ட் பௌல்டன்  
                      2.தமிழ்நாட்டின் முதல் பெண் அரசுப்பேருந்து ஓட்டுனர் யார்?
வசந்தகுமாரி
English words and. Meanings
Arrange-வரிசைப்படுத்து
Brave -தைரியம்
Choose -தேர்ந்தெடு
Difficult -கடினம்
Excuse -மன்னிப்பு
நீதிக்கதை
நாம் ஏன் கோபத்தில் சத்தம் போடனும் கோபம் வந்தா என்ன செய்வோம்?
_யார்மேல நமக்கு கோபமோ, அவங்ககிட்ட சத்தம்போட்டு சண்டைபிடிப்போம்!! இல்லையென்றால் பேசாம அமைதியா இருந்துடுவோம்!_
ஆனா, எப்பவாவது யோசிச்சிருக்கோமா? யார்மேல நமக்கு கோபம் வந்தாலும் அவர்கள் நமக்கு மிக அருகில்தானே இருக்காங்க!
எதுக்கு ஊருக்கே கேட்கிறமாதிரி சத்தம் போடனும்?

மெதுவா சொல்லவேண்டியதை சொன்னாலே அவங்களுக்கு கேட்குமே!
நானும் யோசிச்சதில்லைங்க!
ஆனா இந்த கதையைப் படித்தபிறகு??????


ஒரு துறவி கங்கையில் குளித்துவிட்டுக் கரையேறும் சமயம், அவ்விடத்தில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள், சத்தம் போட்டு ஒருவரை ஒருவர் திட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
அதைப் பார்த்த துறவி, தன் சீடர்களிடம் திரும்பி சிரித்துக்கொண்டே கேட்கிறார்?
ஏன் மனிதர்கள் கோபத்தில் இருக்கும்போது ஒருவரை ஒருவர் பார்த்து சத்தம்போட்டு சண்டை பிடிக்கிறார்கள்?
சீடர்கள் சில நிமிடங்கள் சிந்திக்கிறார்கள்.....பின்னர்..
சீடர்களில் ஒருவர்: கோபத்தில் நாம் அமைதியை இழக்கிறோம்!
அதனால் சத்தமிடுகிறோம்!
துறவி: ஆனால், உனக்கு மிக சமீபத்தில் இருக்கும் நபரிடம், ஏன் சத்தமிடுகிறாய்?
அவர்கள் உன்னருகில்தானே நிற்கிறார்கள்!
நீ சொல்ல வேண்டியதை அவர்களுக்கு மட்டும் கேட்கும் விதமாக எடுத்துறைக்கலாமே!
ஒவ்வொரு சீடரும் ஒரு காரணம் சொல்கிறார்......
ஆனால் எந்த காரணத்திலும் அடுத்தவர்களுக்கு உடன்பாடில்லை!
கடைசியாக துறவி பதில் கூறுகிறார்.....
எப்பொழுது இரு மனிதர்கள், ஒருவர் மீது ஒருவர் கோபம் கொள்கிறார்களோ, அப்பொழுது அவர்களின் மனது இரண்டும் வெகு தொலைவுக்குச் சென்றுவிடுகிறது! எனவே தூரத்தில் இருக்கும் மனதுக்கு கேட்க வேண்டும் என்பதற்காகவே, சத்தமிடுகிறார்கள்!
மனது எவ்வளவு தூரம் விலகி இருக்கிறதோ, அவ்வளவு தூரம் இவர்கள் தங்கள் ஆற்றலை உபயோகித்து சத்தம்போட வேண்டியிருக்கும்!
அப்பொழுது தானே தங்கள் கருத்து வெகு தொலைவில் இருக்கும் மனதைச் சென்றடையும்!
ஆனால் இதுவே, இரு மனிதர்கள் ஒருவர் மீது ஒருவர் அன்பாக இருக்கும்போது என்ன நடக்கிறது?
அவர்கள் ஒருவரைப் பார்த்து ஒருவர் சத்தமிடுவதில்லை! அமைதியாகவும், அன்பான முறையிலும் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்துவார்கள்!
காரணம் அவர்களின் மனது இரண்டும் வெகு சமீபத்திலே இருக்கும்!
மனதிற்கு இடையேயான தூரம், மிகக் குறைவாக இருக்கும் அல்லது மனதிரண்டும் ஒன்றோடு ஒன்று இணைந்தே இருக்கும்!
துறவி தொடர்ந்து கூறுகிறார்...
இதைவிடவும் அதிகமாக ஒருவர் மீது ஒருவர் அன்பு செலுத்தும்போது என்ன நடக்கும்?
அவர்கள் ஒருவருக்கொருவர் சத்தமாக பேச தேவையிருக்காது! அவர்களின் மனதுகள் இரண்டும் கிசுகிசுப்பாக பேசுவதில் இருந்தே, அவர்களின் கருத்துகள் பரிமாறப்படும்!
இன்னும் இன்னும் அன்பு அதிகமாகும்போது வார்த்தையே தேவைப்படாது!
அவர்கள் கண்கள் ஒருவரை ஒருவர் பார்க்கும்போதே, மனதின் எண்ணங்கள் வெளிப்பட்டுவிடும்!
துறவி கடைசியாக சீடர்களைப் பார்த்து கூறுகிறார்,
அதனால் நீங்கள் ஒருவருடன் ஒருவர் வாதிடும்போது,
உங்கள் மனதுகள் இரண்டும் தொலைவாகப் போய்விடாமல் பார்த்துக்கொள்ளுங்கள்!
மனதின் தொலைவை அதிகப்படுத்தும் வார்த்தைகளைஉபயோகப்படுத்தாதீர்கள்!"
அப்படி செய்யாமல் போனால், "ஒருநாள் உங்கள் மனங்களிரண்டின் தூரம் கொஞ்ஞம் கொஞ்ஞமாக அதிகமாகி, கடைசியில் ஒன்றுசேரும் பாதையே அடைக்கப்பட்டுவிடும் நிலை வந்துவிடும்!"".
"வாழ்க வளமுடன்"
இன்றைய  செய்திகள்
24.07.2018
*மேட்டூர் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவான 120 அடியை தாண்டி 120.50 அடிக்கு உயர்ந்துள்ளதால் திங்கள்கிழமை இரவு 10 மணி முதல் 80,000 கன அடி நீர் திறக்கப்படவுள்ளது.
* மதுரை காமராஜர் பல்கலைக்கழத்திற்கு புதிய துணை வேந்தரை நியமிக்க இடைக்காலத் தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
* இந்தியாவில், மருத்துவரின் பரிந்துரைகள் இல்லாமல், நோய் எதிர்ப்பு மருந்துகளை மிக அதிகமாக பயன்படுத்துவதால், செப்சிஸ் என்று சொல்லக் கூடிய நோய்த் தொற்று உருவாகி, அதன் மூலம் ஆண்டுக்கு 57,000 குழந்தைகள் உயிரிழப்பதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
* தேசிய இளையோர் தடகள சாம்பியன்ஷிப்பில், ஆடவருக்கான டெக்லத்தான் போட்டியில் மோஹித் குமார் 6,707 புள்ளிகளுடன் புதிய தேசிய சாதனை படைத்தார்.
* இந்தோனேஷியாவில் நடைபெற்ற ஆசிய ஜூனியர் பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் லக்ஷயா சென் சாம்பியன் பட்டம் வென்றார். இப்போட்டியில் தங்கம் வெல்லும் 3-ஆவது இந்தியர் அவர் என்பது குறிப்பிடத்தக்கது.
*Today's headline*
 Coimbatore ;The director of matriculation schools, in  a recent communication has asked private schools in the state to avoid conducting special classes for students in class is X to XII before or after the school hours.
In Coimbatorr ,  The state government has identified the kosika as one of the rivers with deficit water supply to link with water bodies that have surplus supply
 Water was released from the Azhiyar Reservoir on Saturday and Sunday .An official said 600 cubic feet per second water was released from the dam on Sunday evening and around 500 cusecs and Saturday night.
 New Delhi: Indian Space Research Organisation has bought the technology for space solar cells from the US and will mass - produced them in the country solar cells are needed to power a satellite in space and keep it functional till its life span
 Fast riding teen shuttler Lakshya Sen toppled top speed and reigning world junior Champion kunlavut vitidsaran to became the first Indian boy after 53 years to win the Asian junior Championship in Jakarta on Saturday.
Thanks to Covai Woman ICT

Share this