மாதந்தோறும் சேமிப்பது முக்கியம்.
மாத வருவாயில் குறைந்தபட்சம், ௧௦ சதவீதமாவது சேமிக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. அதிகம் சேமிக்க முடிந்தால் நல்லது. வரவுக்கும் செலவுக்கும் சரியாக இருக்கும் நிலையில் சேமிக்க முடியவில்லை என்றாலும் மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்பது போல, முயற்சி செய்தால் அதிகமாக சேமிக்கலாம். அதற்கான வழிகள்:பாதி வருமான சவால்
உங்களால் பாதி வருமானத்தை வைத்து வாழ முடிந்தால் எப்படி இருக்கும்? அப்போது பாதி வருமானத்தை சேமிக்க முடியும் அல்லவா? பாதி வருமானத்தில் வாழ்வது இயலாத காரியம் என தோன்றினாலும், இதை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு முயற்சிக்கலாம். முழுவதுமாக நிறைவேற்ற முடியாமல் போனாலும் கூட, இலக்கை நெருங்கினாலும் கூட வெற்றி தான்.
தேவை திட்டமிடல்
பாதி வருமானத்தில் வாழ்வதற்கு மன உறுதியும், திட்டமிடலும் தேவை. இந்த திட்டமிடலை செலவு கணக்கில் இருந்து துவக்க வேண்டும். டயட் கட்டுப்பாட்டிற்கு தயாராவது போல, செலவு களை குறைப்பதற்கும் முறையாக தயாராக வேண்டும். இதற்கு, மாதாந்திர செலவுகளை முதலில் கண்காணிக்க வேண்டும். ஒரு மாதம் எல்லா செலவுகளையும் குறித்து வைக்க வேண்டும்.
செலவு கட்டுப்பாடு
ஒரு மாதம் செலவுகளை கண்காணித்த பின், எந்த செலவுகள் எல்லாம் அத்தியாவசியமானவை மற்றும் எவை எல்லாம் தேவை இல்லாத செலவுகள் என்று புரிந்திருக்கும். இப்போது, அத்தியாவசிய செலவுகளை மேற்கொண்டு, தேவை இல்லாத செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும்.
சேமிப்பு ஏற்பாடு
செலவுகளை கட்டுப்படுத்திய பிறகு, வருமானத்தில் மிஞ்சும் தொகையை சேமிப்பாக மாற்ற வேண்டும். மாதம் எவ்வளவு தொகையை மிச்சம் செய்ய முடியும் என்ற புரிதலின் அடிப்படையில், அந்த தொகை, தானாக வங்கி கணக்கில் இருந்து சேமிக்கப்பட வழி செய்ய வேண்டும். முதலில் சேமிப்பு கணக்கிற்கு தான் பணம் செல்ல வேண்டும்.
குடும்பத்தினர் பங்கு
பாதி வருமானத்தை சேமிக்க முயலும் போது, பல்வேறு தடைகள் ஏற்படலாம். வாழ்வியல் சார்ந்த செலவுகளை உறுதியுடன் கட்டுப்படுத்த வேண்டும். பல செலவுகளுக்கு குறைந்த செலவிலான தரமான மாற்று வழிகளை நாடலாம். குடும்ப உறுப்பினர்களையும் இதில் அங்கமாக்கி பங்கேற்க செய்ய வேண்டும்
பாதி வருமானத்தை சேமிக்க முயலும் போது, பல்வேறு தடைகள் ஏற்படலாம். வாழ்வியல் சார்ந்த செலவுகளை உறுதியுடன் கட்டுப்படுத்த வேண்டும். பல செலவுகளுக்கு குறைந்த செலவிலான தரமான மாற்று வழிகளை நாடலாம். குடும்ப உறுப்பினர்களையும் இதில் அங்கமாக்கி பங்கேற்க செய்ய வேண்டும்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...