அமைச்சர் செங்கோட்டையனுடன் செல்லிடப்பேசியில் பேசிய மாணவியர்

திருவாரூர் மாவட்டம், குடவாசல் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவியர்,
அமைச்சர் ஆர். காமராஜின் செல்லிடப்பேசி வாயிலாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனுடன் பேசி, விலையில்லா சைக்கிள் வழங்குமாறு கோரிக்கை விடுத்த வைத்த சம்பவம் சனிக்கிழமை நடைபெற்றது


திருவாரூர் மாவட்ட அதிமுக செயலாளரும், தமிழக உணவுத்துறை அமைச்சருமான ஆர். காமராஜ், குடவாசல் வழியாக காரில் சென்று கொண்டிருந்தபோது, அவ்வழியே மாணவியர் சிலர் பள்ளிக்கு நடந்து சென்றனர். இதைக் கவனித்த அவர், காரை நிறுத்தி கீழே இறங்கி, மாணவியரிடம் பேசினார்


அப்போது, ஏன் நடந்து செல்லுகின்றீர்கள்? எனக் கேட்டார். இதற்கு பதிலளித்த மாணவியர், நிகழாண்டு 11, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் இன்னமும் வழங்கப்படவில்லை என்று தெரிவித்தனர்


உடனடியாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனை செல்லிடப்பேசியில் தொடர்புகொண்ட அமைச்சர் காமராஜ், விவரத்தைக் கூறி மாணவியரையும் அவருடன் பேச வைத்தார். அதன்படி, தங்களது கோரிக்கைகளை மாணவியர் அமைச்சரிடம் தெரிவித்தனர்


இதை ஏற்று உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்


எதிர்பாராத இந்த சம்பவத்தால் மாணவியர் மகிழ்ச்சியடைந்தனர்
Share this

0 Comment to "அமைச்சர் செங்கோட்டையனுடன் செல்லிடப்பேசியில் பேசிய மாணவியர்"

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...