நாடு முழுவதும் கனமழை எச்சரிக்கை!
புதுடில்லி : அடுத்த 24 மணி நேரத்திற்கு இந்தியாவின் பல மாநிலங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.
அருணாச்சல பிரதேசம், அசாம், மேகாலயா, நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம், திரிபுரா, மேற்குவங்கம், சிக்கிம், ஒடிசாவின் கடலோர பகுதிகள், உ.பி., அரியானா, சண்டிகள், டில்லி, பஞ்சாப், காஷ்மீர், கிழக்கு ராஜஸ்தான். குஜராத், கோவா, மத்திய மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் கேரளாவின் கடலோர பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே கர்நாடகாவில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள அணைகள் அனைத்தும் நிரம்பி உள்ளன. இதனால் காவிரி ஆற்றில் விநாடிக்கு 81,038 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கேஆர்எஸ் அணையில் இருந்து 51,038 கனஅடியும், கபினி அணையில் இருந்து 30,000 கனஅடி நீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது.
ஒடிசா மற்றும் தெற்கு சட்டீஸ்கரில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Share this