தேசிய அளவில் CBSE ஆசிரியர் விருதுகள் எண்ணிக்கை உயர்வு

சி.பி.எஸ்.இ., என்ற, மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின்,
இணைப்பு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, தேசிய அளவில், சி.பி.எஸ்.இ., ஆசிரியர் விருது வழங்கப்படுகிறது. தேசிய அளவில், இதுவரை, 34 விருதுகள் வழங்கப்பட்டன. இந்த ஆண்டு முதல், 48 விருதுகள் வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த விருதில், பள்ளி முதல்வர்களுக்கு, ஐந்து; கலை, தொழிற்கல்வி, உடற்கல்வியியல், தகவல் தொழில்நுட்பம் மற்றும் சிறப்பு ஆசிரியர்களுக்கு, தனியாக, 10 விருதுகள் வழங்கப்பட உள்ளன

Share this