Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 06.12.18

டிசம்பர் 6

இந்திய அரசியல் அமைப்பின் தந்தை டாக்டர் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாள்

திருக்குறள்

அதிகாரம்: நடுவுநிலைமை

திருக்குறள்:113

நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை
அன்றே யொழிய விடல்.

விளக்கம்:

தீமை பயக்காமல் நன்மையே தருவதானாலும் நடுவு நி‌லைமை தவறி உண்டாகும் ஆக்கத்தை அப்போதே கைவிட வேண்டும்.

 பழமொழி

Cut the coat according to the cloth

வரவுக்குத்
தகுந்த செலவு செய்

இரண்டொழுக்க பண்புகள்

1. இயற்கை வளங்களான நீர், காற்று, நிலத்தை பாதுகாத்து என்னால் முடிந்த அளவு அவற்றை மாசு படுத்தாமல் இருப்பேன்.

2.மின்சாரம் போன்ற எரி பொருட்கள் வீணாக்காமல் சிக்கனமான உபயோகிப்பேன்.

பொன்மொழி

திறமை உடையவர்கள் மற்றவர்கள் படும் துன்பத்தைக் கண்டு,அதிலிருந்து பாடம் கற்றுக் கொள்கிறார்கள்.

   - தாமஸ் கார்லைல்

பொதுஅறிவு


1.டெல்லியின் பழங்காலப் பெயர் என்ன?

 இந்திரப்பிரஸ்தம்

2. ஹாலந்து  நாட்டின்  தற்போதைய பெயர் என்ன?

 நெதர்லாந்து

தினம் ஒரு பாரம்பரிய உணவுப் பொருளின் மகத்துவம்

அத்திப் பழம்




1. உணவை விரைவில் ஜீரணிக்கச் செய்து, சுறுசுறுப்பைத்தந்து, கரும் பித்தத்தை வியர்வை மூலம் வெளியாக்கி, ஈரல், நுரை யீரலிலுள்ள தடுப்புகளையும் நீக்குகிறது.

2. கால் விரல்களில் உண்டாகும் ஒருவித நோயையும் வராமல் தடுக்கிறது. அத்திப்பழம் தின்பதால் வாய்நாற்றம் நீங்குவதுடன் தலைமுடியும் நீளமாக வளர்கிறது.

3. பழத்தைப் பொதுவாக உடல் பலவீனத்திலும், ஜுரங்களிலும் பரவலாகப் பயன்படுத்துகிறார்கள்.

English words and meaning

Squash  நசுக்கு,பிழி
Squib     சுடுசொல்,
Spy.        உளவன்,வேவு
Socket.   கூடு,குழிவு
Shaft.     அம்பு,நீண்டகம்பி

அறிவியல் விந்தைகள்

காய்கறிகள் மற்றும் பழங்களில் உள்ள வாசனை, நிறம் மற்றும் சுவை ஆகியவற்றின் காரணம் அவற்றில் உள்ள ஃபீனாலிக் சேர்மங்கள் ஆகும்.

* எறும்பு மற்றும் குளவி கொட்டினால் வலிக்க காரணம் அவற்றின் உடம்பில் உள்ள ஃபார்மிக் அமிலம் ஆகும்.

* எலுமிச்சை மற்றும் ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் பழங்கள் புளிப்பு சுவையுடன் இருக்க காரணம் அவற்றில் உள்ள சிட்ரிக் அமிலம் ஆகும்.

நீதிக்கதைகள்

ஒரு அருமையான குட்டிக் கதை…!

பொதுவாக ஜப்பானியர்கள் மீன் உணவை மிக விரும்பிச் சாப்பிடுபவர்கள்…

அது ஜப்பான் நாட்டின் ஒரு தீவு.
அந்தத் தீவு மக்களும் அப்படியே மீன் உணவை விரும்பிச் சாப்பிட, படகை எடுத்துக் கொண்டு சில கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள கடற்பகுதிக்குச் செல்வார்கள். அங்கிருந்து திரும்பி வர இரண்டு நாட்களாகிவிடும்.

அக்குறிப்பிட்ட இடத்தில் கிடைக்கும் மீன்கள் தான் மிக ருசியானதாக இருக்கும்.
ஆனால், மீன் பிடித்ததும் கொண்டு வர இரண்டு நாட்களாகி விடுவதால் அந்த மீனின் சுவை குறைந்துவிடும்.

மீனவர்கள் கையோடு, ஐஸ்கட்டிகளைக் கொண்டு சென்று அதில் பதப்படுத்திக் கொண்டு வந்தார்கள். ஆனாலும், மக்களுக்கு திருப்தி இல்லை. ஃப்ரெஷ் மீனுக்கும் ஐஸ் கட்டிகளில் வைக்கப்பட்ட மீனுக்கும் சுவை வேறுபடுவதை உணர்ந்தனர்…

இப்பொழுது மீனவர்கள், ஒரு சிறு தண்ணீர் தொட்டி ஒன்றைச் செய்து, அதில் மீன்களைப் பிடித்துப் போட்டு கொண்டு வந்தனர்…

ஆயினும், அத்தனைப் பெரிய கடற்பரப்பில் நீந்திக் கொண்டிருந்த மீன்கள், சிறிய தண்ணீர்த் தொட்டியில் இரண்டு நாட்களாக சோம்பிக் கிடப்பதினால் மீனின் சுவை குன்றிப் போவதாக மீண்டும் குறை…

யோசித்த மீனவர்கள் புதிதாக ஒரு யோசனை செய்தார்கள்.

குட்டிச் சுறா மீன் ஒன்றைப் பிடித்து அந்தத் தொட்டிக்குள் விட்டார்கள்.
இந்தச் சுறாவிடம் இருந்து தப்பிப்பதற்காக...
அந்த மீன்கள் எல்லாம் அந்தத் தொட்டிக்குள் வேக வேகமாக நீந்திக் கொண்டே இருந்தன ஓய்வின்றி.

இப்பொழுது இரண்டு நாட்கள் கழித்து வந்த அந்த மீன்கள் முன்பு இருப்பதையும் விட மிகச் சுவையானதாக இருந்தனவாம்.

நாம் வாழ்கின்ற வாழ்க்கையும் அப்படித்தான். வாழ்க்கை சுவைக்க கவலைகளோடே கிடக்கக்கூடாது. சுறுசுறுப்பாக ஓடிக் கொண்டே இருக்க வேண்டும். பிரச்சனைகள் என்கிற சுறா இருந்தால் மட்டும் தான் வாழ்க்கை என்ற மீன்கள் சுவையானதாக இருக்கும். பிரச்சனைகள் இல்லாவிட்டால் நாம் ஓட மாட்டோம்…
சோம்பியே தான் கிடப்போம்…
சுறுசுறுப்பாக ஓடி வாழ்க்கையை சுவையானதாக மாற்றுவோம்…

கதையின் நீதி :-

அர்ச்சனை இல்லாத கடவுளும் இல்லை…
பிரச்சனை இல்லாத மனிதர்கள் இந்த உலகில் யாரும் இல்லை.

இன்றைய செய்திகள்

06.12.2018

* எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய சஞ்சாரம் நாவலுக்கு இந்த ஆண்டின் சாகித்ய அகாதெமி விருது அறிவிக்கப்பட்டது.

* இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் இஸ்ரோ ஜிசாட்-11 செயற்கைக்கோளை பிரெஞ்ச் கயானாவில் உள்ள கூரு ஏவுத்தளத்தில் இருந்து  வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.

*  தென் ஆப்ரிக்காவில், அரசு வழக்குகளை விசாரிக்கும் கமிஷனின் இயக்குனராக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த  ஷமிலா பட்டோஹி நியமிக்கப்பட்டு உள்ளார்.

* அடிலெய்ட் டெஸ்ட்: ஆஸ்திரேலிய, இந்திய அணிகளின் பட்டியல் வெளியீடு!

* ஜனவரி 6-ல் சென்னை மாரத்தான் போட்டி: ரூ.25 லட்சம் பரிசுத்தொகை அறிவிப்பு


Today's Headlines

🌹This year's Sahitya Akademi Award was announced for the Novel Sanjaram written by S. Ramakrishnan.

🌹Indian Space Research Center successfully launched the ISRO GSAT-11 satellite from the Kuru Air Force in French Guiana.

🌹 In South Africa, Shamilila Batohi of Indian descent has been appointed as director of the commission to investigate the cases.

🌹Adelaide Test: List of Australian and Indian teams was released

🌹 Chennai Marathon Tournament on January 6: Rs 25 lakh reward announcement🎖💐

Prepared by
Covai women ICT_போதிமரம்




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive