Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 07.12.18

திருக்குறள்


அதிகாரம்:நடுவுநிலைமை

திருக்குறள்:114

தக்கார் தகவிலர் என்ப தவரவர்
எச்சத்தாற் காணப் படும்.

விளக்கம்:

நடுவுநிலைமை உடையவர் நடுவுநிலை‌மை இல்லாதவர் என்பது அவரவர்க்குப் பின் எஞ்சி நிற்கும் புகழாலும் பழியாலும் காணப்படும்.

 பழமொழி

Well began is half done

நல்ல தொடக்கம் பாதி வெற்றி

இரண்டொழுக்க பண்புகள்

1. இயற்கை வளங்களான நீர், காற்று, நிலத்தை பாதுகாத்து என்னால் முடிந்த அளவு அவற்றை மாசு படுத்தாமல் இருப்பேன்.

2.மின்சாரம் போன்ற எரி பொருட்கள் வீணாக்காமல் சிக்கனமான உபயோகிப்பேன்.

பொன்மொழி

புதிய முயற்சிகளில் தவறு ஏற்படுவது இயற்கையே.

       - பாரதியார்

பொதுஅறிவு

1.இந்தியாவில் தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனம் எங்கு அமைந்துள்ளது?

பெங்களூரு
 (கர்நாடகா)

2. இந்து என்னும் ஆங்கில நாளிதழை தோற்றுவித்தவர் யார்?

 ஜி . சுப்ரமணியஐயர்

தினம் ஒரு பாரம்பரிய உணவுப் பொருளின் மகத்துவம்

திராட்சை பழம்




1. ஊட்டச்சத்து மிக்க பழங்களில் திராட்சையும் ஒன்று. இதில் வைட்டமின் பி1, பி2, பி3, பி6, பி12, சி, இரும்புச்சத்து, பாஸ்பரஸ் சத்து ஆகியவை உள்ளன. ரத்த சோகை, மலச்சிக்கல், ஜீரண கோளாறு, சிறுநீரகக் கோளாறுகளைப் போக்கும் சக்தி திராட்சைக்கு உண்டு.

2. உறக்கம் இல்லாமல் அவதிப்படுபவர்களுக்கும் மாமருந்தாகிறது திராட்சை பழம்.
திராட்சையை உண்பதால் உடல் வறட்சி, பித்தம் நீங்கும். ரத்தம் தூய்மை பெறும். இதயம், கல்லீரல், மூளை, நரம்புகள் வலுப்பெறும்.
ஜீரணக் கோளாறு இருப்பவர்கள் திராட்சைப் பழத்தை சாப்பிட்டு வர நல்ல தீர்வு கிடைக்கும்.

3. இதை தினமும் சாப்பிட்டு வந்தால் எலும்புகள், பற்கள் கெட்டிப்படும். மேலும் இருதயம் பலப்படும்.

English words and meaning

Thrive.
செழித்து ஓங்கு

Thraldom அடிமைத்தனம்

Tease.
கேலி செய்தல்

Tackle.  சமாளி

Tedious.  சோர்வூட்டுகின்ற

அறிவியல் விந்தைகள்

உலோகம்
* உலகின் ஒரே திரவ உலோகம் பாதரசம்
* நம் கைச் சூட்டில் உருகும் உலோகம் காலியம்
* அதிக எடையுள்ள உலோகம் ஓஸ்மியம்
* மிகவு‌ம் எடை குறைந்த உலோகம் லித்தியம்

நீதிக்கதைகள்

கப்பல் ஒன்று கடலில் வழிதவறி செல்லும்போது புயலில் சிக்கி மூழ்கிவிடுகிறது. அதில் ஒருவன் மட்டும் எப்படியோ தப்பி விடுகிறான். அருகிலுள்ள தீவில் அவன் கரையேறுகிறான்.

“இறைவா… இங்கிருந்து எப்படியாவது என்னை தப்பிக்க வைத்துவிடு. ஆள் அரவமற்ற இந்த தீவில் எத்தனை நாள் நான் இருப்பது? என் மனைவி மக்களை பார்க்கவேண்டாமா??” என்று பிரார்த்திக்கிறேன்.

ஏதாவது ஒரு ரூபத்தில் தனக்கு உதவிக்கரம் நீளும் என்று தினசரி எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏமாந்துவிடுகிறான். எதுவும் உதவி கிடைத்தபாடில்லை. இப்படியே நாட்கள் ஓடுகின்றன.

தன்னை காத்துக்கொள்ள, தீவில் கிடைத்த பொருட்கள், மற்றும் கப்பலின் உடைந்த பாகங்கள் இவற்றை கொண்டு ஒரு சிறிய குடிசை ஒன்றை கட்டுகிறான். அதில் கரை ஒதுங்கிய கப்பலில் இருந்த தனது பொருட்கள் மற்றும் உடமைகள் சிலவற்றை மட்டும் பத்திரப்படுத்தி, தானும் தங்கி வந்தான்..

இப்படியே சில நாட்கள் ஓடுகின்றன. இவன் பிரார்த்தனையை மட்டும் விடவில்லை. கடவுள் ஏதாவது ஒரு ரூபத்தில் நமக்கு நிச்சயம் உதவுவார் என்று தன்னை தேற்றிக்கொண்டான்.

ஒரு நாள் இவன் உணவு தேடுவதற்காக வெளியே சென்றுவிட்டு திரும்புகையில், அவன் கண்ட காட்சி அவனை திடுக்கிட வைத்தது.

பட்ட காலிலே படும் என்பது போல… எது நடக்ககூடாதோ அது நடந்துவிட்டது. இவன் தங்குவதுகென்று இருந்த ஒரே குடிசையும் வானுயுற எழும்பிய புகையுடன் தீப்பிடித்து எரிந்துகொண்டிருந்தது. குடிசைக்குள் இருந்த உடைமைகள் அனைத்தும் தீக்கிரையாகியிருந்தன. அதை பார்த்த இவன் அலறித் துடித்தான். எல்லாம் போய்விட்டது. இவனிடமிருந்த மிச்ச சொச்ச பொருட்களும் போய்விட்டது.

“இறைவா… என்னை காப்பாற்றும்படி தானே உன்னை மன்றாடினேன். நீ என்னவென்றால் இருப்பவற்றையும் பறித்துக் கொண்டாயே… இது தான் உன் நீதியோ…?” என்று கதறி அழுகிறான்.

மறுநாள் காலை ஒரு கப்பலின் சப்தம் இவனை எழுப்பியது. இவன் தீவை நோக்கி அது வந்துகொண்டிருந்தது.

“அப்பாடா… நல்ல வேளை… ஒரு வழியாக இங்கிருந்து தப்பித்தோம். யாரோ நம்மை காப்பாற்ற வருகிறார்கள்.” என்று உற்சாகத்தில் துள்ளி குதித்தான்.

கப்பல் சிப்பந்திகள் இவனை, லைஃப் போட்டில் வந்து அழைத்து சென்றார்கள்.

தான் இங்கே தீவில் மாட்டிக்கொண்டிருப்பது எப்படி தெரியும் என்று அவர்களிடம் கேட்க, “தீவில் ஏதோ பற்றி எரிந்து புகை எழும்பியதை பார்த்தோம்…. யாரோ தீவில் கரை ஒதுங்கி காப்பாற்ற வேண்டி சிக்னல் கொடுக்கிறார்கள் என்று நினைத்தோம்” என்கிறார்கள் அவர்கள்.

அப்போது இறைவன் குடிசையை எரித்த காரணம் இவனுக்கு புரிந்தது. இறைவனுக்கு நன்றி சொன்னான்.

அந்த வழியில் கப்பல்கள் வருவதே மிக மிக அரிதான நிலையில், குடிசை மட்டும் தீப்பிடித்து எரியவில்லை என்றால் தன் நிலை என்னவாகியிருக்கும் என்று அவனுக்கு புரிந்தது. அவசரப்பட்டு இறைவனை நிந்தித்ததை நினைத்து வெட்கினான்.

வாழ்க்கையில் பல சந்தர்ப்பங்களில் நாம் இப்படித்தான் இறைவனை அவசரப்பட்டு தவறாக எடைபோட்டுவிடுகிறோம். நம்மை காக்கவே அவன் ஒவ்வொரு கணமும் காத்திருக்கிறான். அவன் தரும் சோதனைகள் அனைத்தும் நம்மை வேறொரு மிகப் பெரிய ஆபத்திலிருந்து காக்கவே என்று நாம் புரிந்துகொண்டால், எதைப் பற்றியும் அலட்டிகொள்ளவேண்டியதில்லை.

இன்றைய செய்திகள்

07.12.2018


* இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.5-ஆக பதிவு.

* உலக அளவில் வேகமாக வளர்ச்சி அடையும் நாடுகள் பட்டியல்: முதல் 10 இடங்களில் தமிழகத்தின் திருப்பூர், திருச்சி, சென்னை ஆகிய 3 நகரங்களுக்கு
இடம் கிடைத்துள்ளது.

*  மொபைல் எண் உட்பட பல்வேறு திட்டங்களுக்கு கொடுத்த ஆதார் தகவல்களை இனி திரும்பப் பெறலாம்: வருகிறது புதிய சட்டம்.

* ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில்  இந்தியா 250 ரன்கள்  எடுத்துள்ளது.

* பாகிஸ்தானின் யாசிர் ஷா தன் 33வது டெஸ்ட் போட்டியில் 200 விக்கெட்டுகளைக் கைப்பற்றி மிகக்குறைந்த டெஸ்ட்களில் அதிவேகமாக 200 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய உலகசாதனையை நிகழ்த்தியுள்ளார்.

Today's Headlines

🌹Indonesia's earthquake: Record at 5.5 on the Richter scale

🌹The list of fastest growing countries in the world: Top 10 destinations ,three cities  Tirupur, Trichy and Chennai are placed

🌹 Can Receive the Aadhar source information given to various projects, including mobile number: new law comes.

🌹 India took 250 runs in the first Test against Australia.

🌹Yasir Shah of Pakistani has scored 200 wickets in his 33rd Test match and has made a world record of 200 Test wickets in the lowest Test💐🎖

Prepared by
Covai women ICT_போதிமரம்




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive