பொதுத் தேர்வில் 100% மாணவர்கள் தேர்ச்சி பெற நடவடிக்கை வேண்டும் கல்வித்துறை அமைச்சர்

பொதுத்தேர்வில் 100 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற நடவடிக்கை எடுக்கவேண்டும் என புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன் வலியுறுத்தியுள்ளார். காரைக்கால் மாவட்டத்தில் வரும் பொதுத் தேர்வில் 100 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெறச் செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. 


புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன் தலைமை வகித்தார். மாவட்ட கலெக்டர் கேசவன் முதன்மை கல்வி அதிகாரி அல்லி, பள்ளி முதல்வர்கள், துணை முதல்வர்கள், தலைமை ஆசிரியர்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் அமைச்சர் கமலக்கண்ணன் பேசியது: கடந்த ஆண்டு காரைக்காலில் 7 பள்ளிக 90% மேல் மதிப்பெண் பெற்றுள்ளனர். எனவே வரும் ஆண்டு அனைத்து அரசு பள்ளிகளும் தனியார் பள்ளிகளுக்கு இணையாக 100% தேர்ச்சிபெற வேண்டும்
அந்த வகையில், வரும் பத்து மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில், காரைக்கால் மாவட்ட மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க செய்வதோடு, 100 சதவிகிதம் மாணவர்களை தேர்ச்சிபெற பள்ளி முதல்வர்கள், தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக, நன்றாக படிக்கும் மாணவர்கள் அருகில், சுமாராக படிக்கும் மாணவர்களை அமரவைத்து உற்று கவனிக்க செய்ய வேண்டும். ஒருசில பள்ளிகளில் உள்ள ஆசிரியர்கள் பற்றாகுறைகள் விரைவில் சரிசெய்யப்படும் என்றார்.

Share this

0 Comment to "பொதுத் தேர்வில் 100% மாணவர்கள் தேர்ச்சி பெற நடவடிக்கை வேண்டும் கல்வித்துறை அமைச்சர் "

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...