12ம் வகுப்பு பொதுத்தேர்வில் சில முக்கிய பாடங்களுக்கான தேர்வு நேரங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக அரசு தேர்வுகள் துறை இயக்குநர் இன்று தெரிவித்துள்ளார்.
வருகிற மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் 12ம் பொதுத்தேர்வு நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி,வேதியியல், கணக்குப் பதிவியல், புவியியல், உயிரியல், வரலாறு, இயற்பியல். வணிகக்கணிதம், அலுவலக மேலாண்மை, கணக்குப்பதிவியல் உள்ளிட்ட பாடங்களுக்கான நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.இதற்கு முன்பு10 முதல் 1.15 மணி வரை நடைபெற்ற தேர்வு, தற்போது 10 மணி முதல் 12.45 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு மொத்தம் 1200 மதிப்பெண்களாக இருந்தது தற்போது 600 மதிப்பெண்களாக (6 பாடத்திற்கு தலா 100 மதிப்பெண்கள்) குறைக்கப்பட்டது குறிப்பித்தக்கது
Botony practical English medium please any body upload
ReplyDelete