NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பதிவு செய்த ஒரு மணி நேரத்தில் பத்திரம்; புதிய வசதி வரும் 17-ம் தேதி தொடக்கம்: பதிவுத் துறை தலைவர் குமரகுருபரன் தகவல்

பத்திரங்களை பதிவு செய்த ஒரு மணி நேரத்தில் திரும்ப வழங்கும் திட்டம் வரும் 17-ம் தேதி தொடங்கப்படுவதாக பதிவுத் துறை தலைவர் ஜெ.குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.தமிழக பதிவுத் துறையில் இணைய அடிப்படையில் பத் திரப் பதிவுக்கான 'ஸ்டார் 2.0' திட்டத்தை முதல்வர் பழனிசாமி கடந்த பிப்ரவரியில் தொடங்கி வைத்தார். தொடர்ந்து, பல்வேறு புதிய வசதிகள் பத்திரப்பதிவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.பத்திரப் பதிவின் ஒவ்வொரு நிலையையும் குறுஞ்செய்தி மூலம் அறிதல், வில்லங்க சான்று, பத்திர நகல் போன்றவற்றை இணைய தளம் மூலம் பெறும் வசதி, முன் பதிவு செய்து குறிப்பிட்ட நேரத்தில் வரிசைப்படி பதிவு செய்தல் என பல்வேறு வசதிகள் தற்போது செய்யப்பட்டுள்ளன.
பத்திரப் பதிவின்போது கட்டணத்தை டெபிட், கிரெடிட் கார்டு, நெட் பேங்கிங் மூலம் செலுத்தும் வசதி, திருமணப் பதிவு, சங்கப் பதிவு போன்றவற்றை ஆன்லைன் மூலம் மேற்கொள்ளுதல் போன்ற வசதிகளும் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டன.தற்போதைய நிலையில், பத்திரப் பதிவு முடிந்து ஒரு சில நாட்களில் அந்த பத்திரம் ஸ்கேன் செய்யப்பட்டு, உரியவர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்நிலையில், பதிவு செய்த அன்றே, குறிப்பாக ஒரு மணி நேரத்துக்குள் வழங்கும் புதிய முறையை பதிவுத் துறை கொண்டுவந்துள்ளது. இதுகுறித்து பதிவுத் துறை தலைவர் ஜெ.குமரகுருபரன் கூறியதாவது:
அலையவிடக் கூடாதுபத்திரப் பதிவுக்காக வரும் மக்களை அடுத்த நாளும் அலைய விடக் கூடாது என்ற நோக்கத் தில் இந்த திட்டம் கொண்டுவரப் பட்டுள்ளது. பதிவுத் துறையில், வரிசையாக பெறப்படும் பத்திரத் துடன் மூல ஆவணங்களை சரி பார்த்து, வாங்குபவர், விற்பவரின் அடையாள ஆவணங்களை ஆய்வு செய்து, அதன்பின் அவர்களை புகைப்படம் எடுத்து, கைரேகை பதிவு பெற்று, பத்திரத்தை ஸ்கேன் செய்து, அதற்கான எண்ணை எழுதி, சீல் வைப்பது உள்ளிட்ட பணிகள் உள்ளன. இப்பணிகளை முடிக்க அதிகபட்சம் ஒரு மணி நேரம் ஆகும். எனவே, ஒரு மணிநேரத்தில், பதிவு செய்யப்பட்ட பத்திரம் திரும்ப வழங்கப்படும்
 
2 வெப்கேமராக்கள்
இதற்காக சார்பதிவாளர் அலு வலகங்களில் பதிவு செய்யப் படும் ஆவணங்களின் எண்ணிக் கைக்கு ஏற்ப, 735 தகவல் தொகுப்பு பணியாளர்கள் பணியமர்த் தப்பட்டுள்ளனர்.
தவிர, பதிவு அலுவலகங் களுக்கு விரல்ரேகை பதிவு கருவி, 2 வெப்கேமராக்கள், அதிக பணிச் சுமை உள்ள அலுவலகங்களுக்கு கூடுதலாக ஒரு அச்சு இயந்திரம், ஸ்கேனர் வழங்கவும் எல்காட் நிறுவனத்திடம் கோரப்பட்டுள்ளது. கூடுதல் பணிச்சுமை அதாவது, தினமும் அதிக அளவில் பத் திரப் பதிவு நடக்கும் அலுவல கங்களில் புதிய ஸ்கேனர் இயந் திரம் வழங்கவும் மாவட்ட பதிவா ளர்களுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது.
 
அதேபோல, புதிதாக நியமிக்கப் பட்டுள்ள தகவல் தொகுப்பாளர் கள், சார்பதிவாளர்களிடம் பக்கச் சான்றில் கையொப்பம் பெற்று ஆவணங்களை வரிசையாக ஸ்கேன் செய்ய வேண்டும். ஸ்கேன் செய்யப்பட்ட அசல் ஆவணங்களை திரும்பப்பெற அதிகாரம் பெற்ற நபரிடம் விரல் ரேகை பெற்று உடனுக்குடன் திரும்ப அளிக்கப் படும். பதிவு செய்த அன்றே பத்திரத்தை திரும்ப வழங்கும் திட்டம் வரும் 17-ம் தேதி அமலுக்கு வருகிறது. அதற்கான முன்னேற்பாடுகள் நடந்து வரு கின்றன.
 
தமிழகத்தில் ஸ்டார் 2.0 திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து கடந்த 12-ம் தேதிவரை, 20 லட்சத்து 95 ஆயிரத்து 417 பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதிகபட்ச மாக சென்னையில் உள்ள 63 சார்பதிவாளர் அலுவலகங்களில் 3 லட்சத்து 66 ஆயிரத்து 675 பத்திரங்கள் பதிவாகியுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive