திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர்
திருக்கோயிலில் பரமபதவாசல் திறப்பையொட்டி டிசம்பர் 18ஆம் தேதி உள்ளூர்
விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:
ஸ்ரீரங்கம் அரங்கநாதர் திருக்கோயிலில், வைகுந்த ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்வான பரமபத வாசல் திறப்பு டிசம்பர் 18ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெறவுள்ளது.
கணினிக்கல்வி. இதனையொட்டி, அன்றைய தினம் திருச்சி மாவட்டத்துக்கு உள்ளுர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது
மாவட்டத்தில் உள்ள தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், நிறுவனங்களுக்கும் இது பொருந்தும். பள்ளி, கல்லூரி தேர்வுகள் நடைபெற்று வருவதால் இந்த உத்தரவு கல்வி நிறுவனங்களுக்கு பொருந்தாது. மேலும் இந்நாளில் அனைத்து துணை கருவூலங்களும், மாவட்ட கருவூலமும் பாதுகாப்பாக குறைந்த பணியாளர்களைக் கொண்டு செயல்படும். இந்த விடுமுறையை ஈடுசெய்யும் பொருட்டு ஜனவரி 5 ஆம் தேதி (சனிக்கிழமை) வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...