கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைக்காக, ராமநாதபுரத்தில் உள்ள பேக்கரி ஒன்றில் வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் சர்க்கரை மற்றும் முட்டையைக்கொண்டு மகாகவி பாரதியாரின் உருவத்தில் கேக் தயாரிக்கப்பட்டுள்ளது.
மகாகவி பாரதி உருவத்தில் செய்யப்பட்ட கேக்.
ராமநாதபுரம் பாரதி நகரில் உள்ளது, ஐஸ்வர்யா பேக்கரி. கிறிஸ்மஸ் பண்டிகை மற்றும் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு, வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் பல்வேறு வகையிலான கேக்குகள் விற்பனை செய்துவருகின்றனர். வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப பிளாக் ஃபாரஸ்ட், ஐஸ் கேக் உள்ளிட்ட பல்வேறு வகையான கேக்குகளைச் செய்து கொடுத்துவருகின்றனர்.
இதற்கு மகுடம் வைத்ததுபோல தங்கள் பேக்கரிக்கு வரும் வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில், மகாகவி பாரதியாரின் முழு உருவத்தை கேக்காக உருவாக்கியுள்ளனர். 80 கிலோ சர்க்கரை, 400 முட்டைகளைக்கொண்டு பாரதியார் உருவத்தில் கேக் உருவாக்கப்பட்டுள்ளது.
மகாகவி பாரதி
மகாகவி பாரதியார் உருவத்தில் ஆன இந்த கேக்கை மாஸ்டர் சதீஷ் தலைமையில் 6 பேர் இணைந்து 5 நாள்களில் உருவாக்கியுள்ளனர். இத்துடன், யேசு பிறப்பைக் குறிக்கும் வகையில் குடில் ஒன்றையும் அமைத்துள்ளனர்.
பேக்கரியின் முன்புறம் கண்ணாடிப் பெட்டியில் வைக்கப்பட்டுள்ள இந்த பாரதியார் உருவ கேக்கிற்கு அருகிலேயே, பாரதியின் சிறப்பைப் போற்றும் கவிதை ஒன்றும் எழுதப்பட்டுள்ளது. பேக்கரிக்கு வருபவர்களை மட்டுமல்ல, அந்த வழியாகச் செல்பவர்கள் பலரையும் இந்த பாரதி உருவ கேக் கவர்ந்துவருகிறது. பாரதியார் உருவ கேக்குடன் பலரும் செல்ஃபி எடுத்து மகிழ்கின்றனர்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...