அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ரோபோட்டிக் தொழில்நுட்ப பயிற்சி

விருதுநகரில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களும் ரோபோடிக் ப்ரோகிரமிங் தொழில்நுட்பம் பற்றி தெரிந்து கொள்ளும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழகத்தில் முதல் முறையாக விருதுநகர் சத்திரரெட்டியபட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் தனியார் அமைப்பு சார்பாக கிராமப்புற மாணவர்கள் ரோபோட்டிக் தொழில்நுட்பம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
வருங்காலத்தில் ரோபோட்டிக் எனப்படும் தொழில்நுட்பம் அபரிமித வளர்ச்சி அடையும் நிலையில் உள்ளது. இதுகுறித்த செயல் விளக்கம் கிராமப்புற மாணவ, மாணவியருக்கு இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் முதல்முறை இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதன் மூலம் வெளிநாடு மற்றும் நகரங்களில் இருக்கும் மாணவ, மாணவியருக்கு கிடைக்கும் தொழில்நுட்பம் சார்ந்த திறன் கிராமப்புற மாணவர்களுக்கு எளிதாக புரியும் வகையில் ரோபோட்டிக் மற்றும் அதன் டெக்னாலஜி பற்றி விளக்கி கூறப்பட்டது.இந்த நிகழ்ச்சி மூலம் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ரோபோக்களை இயக்கி காட்டியும், அதன் செயல்பாடு குறித்தும் தனியார் அமைப்பை சேர்ந்தவர்கள் செயல் விளக்கம் அளித்தனர். இந்த நிகழ்ச்சி தங்களுக்கு பயன் உள்ளதாக இருந்ததாகவும் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவிகள் தெரிவித்தனர். 

Share this