NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பல்வேறு துறைகளில் சாதனை படைத்தோர்க்கு விருது!

மாநிலம் முழுவதும் பல்வேறு துறைகளில் சாதனை
படைத்தோர்க்கு விருது வழங்கிப் பெருமைப்படுத்திய சமூக ஆர்வலர் திருமலைக்குமரன்... 

 திருநெல்வேலி,டிச.9 :திருநெல்வேலி லயன்ஸ் கிளப் ஆப் கிரீன் சிட்டி மற்றும் டீம் டிரஸ்ட் சார்பில் மனித உரிமைகள் தின விழா ஹோட்டல்  விஜயா கார்டனில் நடைபெற்றது..

விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் டீம் டிரஸ்ட்  நைனாமுகம்மது  வரவேற்றுப் பேசினார்..லயன்ஸ் கிளப் கிரீன்சிட்டி செந்தில்முருகன் தலைவர் உரையாற்றினார்..

விழாவில் சமூக ஆர்வலர் டீம் டிரஸ்ட நிறுவனர் லயன்ஸ் திருமலைக்குமரன் தலைமை வகித்திப் பேசியதாவது:இந்த விழாவானது தொடர்ச்சியாக 13 ஆம் ஆண்டுகளாக நடத்தி வருகிறோம்.ஒவ்வோர் வருடமும் டிசம்பர் 10 ஆம் தேதி மனித உரிமைகள் தினத்தன்று  
மனித நேயத்தோடு சேவை செய்பவர்களை உற்சாகப்படுத்த  இந்த விழா நடைபெறும்..இந்த ஆண்டு டிசம்பர் 10 ஆம் தேதி எல்லோருக்கும் வேலை நாள் என்பதால் இரண்டு நாட்கள் முன்னதாகவே நடத்துகிறோம்.எங்களது அமைப்பின் சார்பில் பூமி வெப்பமயமாதலை தடுப்பது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு கொடுத்து வருகிறோம்.பொதுமக்களிடம் விழிப்புணர்வு கொடுத்தால் மட்டும் தான் மக்களிடம் மாற்றத்தை கொடுக்க முடியும்.மேலும் தமிழ்நாட்டில் அனைத்து பள்ளி கல்லூரிகளிலும் சுற்றுச் சூழல் விழிப்புணர்வு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கி வருகிறோம்.இன்றைய தினம்  தமிழ்நாட்டில் இருந்து பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்து இருக்கிறீர்கள்..திறமை மிக்க உங்களை பாராட்ட வாழ்த்த யாருக்கும் மனம் வரவில்லை...ஆனால் எங்களது அமைப்பின் நோக்கமே திறமையான உங்களை ஊக்கப்படுத்த வேண்டும் என்பதே..நீங்கள் அனைவர் செய்த சாதனைகளை,சேவைகளை தனி ஒருவனாகிய என்னால் செய்ய இயலாது..ஆனால் நான் செய்ய நினைப்பதை என்னைப் போல் நீங்கள் செயல்படுவதால் உங்களை பாராட்ட வேண்டும்..உங்கள் மூலம் மற்றவர்களுக்கு சேவை செய்ய முடியும் என்பதால் தான் உங்களை ஊக்கப்படுத்த இந்த விருது வழங்கும் விழா..ஒவ்வோர் ஆண்டும் விருது வழங்கும் விழாவில் உயர் பதவியில் உள்ளவர்களை வைத்து தான் விருது வழங்கி கொண்டிருக்கிறோம்..காரணம் அதை கொடுப்பவர்கள் உயர் பதவியில் இருக்க வேண்டும் என்பதால் தான் எனவே இவ்விருதினை பெறும் இன்னும் மேன்மேலும் பல சாதனைகள் படைத்திட வேண்டும் என்றார்...

விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக பணிநிறைவு பெற்ற மாவட்ட நீதிபதி எம்.ராமச்சந்திரன்,பழையங்கோட்டை மத்திய சிறைச்சாலை சிறைகண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார்,அரிமா முதல் பெண் ஆளுநர் சுதந்திரலெட்சுமி,லயன் ஜெகன்நாதன்,ராணி அண்ணா அரசுமகளிர் கலைக்கல்லூரி முதல்வர் மைதிலி,முனைஞ்சிபட்டி அரசு ஆசிரியர் பயிற்சி பள்ளி முதல்வர் கோல்டா கிரானா ராசாத்தி,திருநெல்வேலி மாவட்ட அரசு அருங்காட்சியகம் மாவட்ட காப்பாட்சியர் சிவ.சத்தியவள்ளி ,கோவில்பட்டி அம்பாள் அரிமா சங்க தலைவர் பிரபு ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்..

திருப்பூர் முன்னாள் லயன்ஸ் கிளப் தலைவர் சதாசிவம்,செயலாளர் செந்தில்குமார்,தாளாளர் நவீன்குமார்,திருநெல்வேலி லயன்ஸ் கிளப் நவீன் குமார்,சீதாபதி டிரான்ஸ்போர்ட் உரிமையாளர் ஜானகிராம் அந்தோணி,மனித வள மேம்பாட்டு பயிற்சியாளர் இசக்கிமுத்து,திருநெல்வேலி ரோட்டரிகிளப் ஆவுடையப்ப குருக்கள்,லைப் லைன் இரத்த வங்கி நிறுவனர் ரமேஷ்,டீம் டிரஸ்ட ஜெய்லானி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

விழாவில் மாணவ,மாணவிகளின் கல்விப் பணியில் சமூக நல அக்கறையோடு சிறப்பாக செயல்படும் ஆசிரியர்களுக்கு சிறந்த கல்விச்சிந்தனையாளர் விருதும்,சமூக நல அக்கறையோடு சிறப்பாக செயல்படுபவர்களுக்கு சமூக நல சிந்தனையாளர் விருதும்,கிராமப் புற மக்களுக்கு மருத்துவ பணியில் சிறப்பாக சேவை செய்து வருபவர்களுக்கு சிறந்த மனித நேயப் பண்பாளர் விருதும்,ஆதரவற்ற ஏழை எளிய மக்களின் நலனில் சிறப்பாக சேவை செய்யும் அமைப்பிற்கு சிறந்த சேவை அமைப்பு விருதும், இயற்கை பாதுகாப்பு மற்றும் நெகிழி விழிப்புணர்வினை ஏற்படுத்தி வருபவர்களுக்கு சிறந்த சுற்றுச் சூழல் ஆர்வலர் விருதும்,ஆம்பூலன்ஸ் மற்றும் இரத்த தான சேவை செய்பவர்களுக்கு சிறந்த சமூக சேவகர் விருதும்,இந்திய நாட்டின் பாதுகாப்பு நலனில் சமூக அக்கறையோடு செயல்படுபவர்களுக்கு சிறந்த ராணுவ வீரர் விருதும்,கிராமப் புற மாணவியின் கல்வியில் அதிக அக்கறையுடனும் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றிடவும் சிறப்பான கவனம் செலுத்தி வரும் பள்ளிகளுக்கு சிறந்த சாதனைப் பள்ளி விருதும்,பெண்களின் பாதுகாப்பில் சமூக நல அக்கறையோடு சமுதாயப் பணி செய்து வருபவர்களுக்கு பெண்கள் நல பாதுகாவலர் விருதும்,   வாடிக்கையாளர்களின் எண்ணங்களுக்கு ஏற்ப சிறப்பாக செயல்படும் நிறுவனங்கு சிறந்த நிறுவன விருதும்,அறுசுவை உணவினை சுவையாகவும், தரமாகவும் மக்களுக்கு வழங்கும் உணவகத்திற்கு சிறந்த உணவக விருதும்,சிறந்த நூலகர் விருதும்,சிறந்த நாதஸ்வர கலைஞர் விருதும்,சிறந்த தடகள பயிற்சியாளர் விருதும்,சிறந்த நடனக்கலைஞர் விருதும்,சிறந்த நீச்சல் விருதும் வழங்கப்பட்டது...

விழாக்குழுவின் தலைவராக  முருகப்பெருமாளும்,துணைத் தலைவராக காளிதாசும் செயல்பட்டனர்..

நிகழ்ச்சியினை ஆ.ஜெயசிந்தி,ஷீலா,ஜெயபிரகாஷ் ஆகியோர் தொகுத்து வழங்கினார்கள் ..முடிவில் லயன் கிறிஸ்டின் ஜானிவர் நன்றி கூறினார்..

முன்னதாக பழைய பேட்டை அகஸ்தியர் சிலம்ப பள்ளி மாணவர்களின் சிலம்பாட்டமும்,பள்ளி மாணவர்களின் வரவேற்பு நடனமும் விழாவிற்கு வந்திருந்த அனைவரின் பாராட்டைப் பெற்றது குறிப்பிடத்தக்கது..





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive