தேர்வுக்கு ஒருமணிநேரம் முன்பாக கேள்வித்தாள் ‘அவுட்’ - குஜராத்தில் காவலர் தேர்வு ரத்து

குஜராத்தில் காவலர் தேர்வு இன்று
நடைபெற இருந்தநிலையில் கேள்வித்தாள் வெளியானதால் தேர்வு ரத்து செய்யப்பட்டது.

குஜராத் மாநிலத்தில் காவலர் தேர்வு இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்காக மொத்தம் 2 ஆயிரத்து 440 மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. இந்த தேர்வை எழுத 8.75 லட்சம் பேர் விண்ணப்பித்து இருந்தனர்.

தேர்வு எழுதுவதற்காக தேர்வு மையங்களுக்கு இளைஞர்கள் திரண்டனர். மாவட்ட தலைநகரங்களில் இருந்து மையங்களுக்கு பல கிலோ மீட்டர் தொலைவு பயணம் செய்து இளைஞர்கள் இன்று பிற்பகல் வந்தனர்.

மாலை 3 மணியளவில் தேர்வு தொடங்குவதாக இருந்தது. இந்தநிலையில், தேர்வு தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன் போலீஸ் எழுத்து தேர்வு ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருந்த வினாத்தாள் நள்ளிரவு நேரத்தில் வெளியானதாக கூறப்படுகிறது.

வினாத்தாள் வெளியானது குறித்து விசாரணைக்கு முதல்வர் விஜய் ரூபானி உத்தரவிட்டுள்ளார்.

Share this