சமையல் சிலிண்டர் விலைக் குறைப்பு!மானிய விலையில் வழங்கப்படும் சமையல் சிலிண்டரின் விலை ரூ.6.52 குறைக்கப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய்யின் விலை நிலவரத்தைப் பொறுத்து இந்தியாவில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. அந்த வகையில் மானிய விலையில் வழங்கப்படும் சமையல் சிலிண்டரின் விலை ரூ.6.52 குறைக்கப்பட்டு ரூ.500.90 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் சிலிண்டர் ஒன்றின் விலை ரூ.507.42 ஆக இருந்ததாக இந்தியாவின் மிகப் பெரிய எரிபொருள் விநியோக நிறுவனமான இந்தியன் ஆயில் கார்பரேஷன் தெரிவித்துள்ளது. இந்த விலை உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.

சென்ற ஜூன் மாதம் முதலே சமையல் சிலிண்டரின் விலை தொடர்ந்து ஆறு மாதங்களாக உயர்த்தப்பட்டு வந்தது. இந்த விலைக் குறைப்புக்கு முன்னர் சிலிண்டரின் விலை மொத்தம் ரூ.14.13 வரையில் உயர்த்தப்பட்டிருந்தது. கடைசியாக நவம்பர் 1ஆம் தேதி மானிய சிலிண்டரின் விலை ரூ.2.94 உயர்த்தப்பட்டிருந்தது. மானியமில்லா சிலிண்டரின் விலை ரூ.133 குறைக்கப்பட்டுள்ளது. டெல்லியில் 14.2 கிலோ எடை கொண்ட மானியமில்லா சிலிண்டரின் விலை ரூ.809.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Share this

0 Comment to "சமையல் சிலிண்டர் விலைக் குறைப்பு! "

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...