அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் பணித் திறன் குறித்து,
பொது மக்கள் அளிக்கும் மதிப்பெண் அடிப்படையில், பதவி உயர்வு வழங்கும்
திட்டத்தை, அடுத்த ஆண்டு முதல் அமல்படுத்த, மத்திய அரசு முடிவு
செய்துள்ளது.அரசு அலுவலகங்களில், அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் நடந்து
கொள்ளும் விதம், வேலைகளை முடிக்கும் திறன் போன்றவற்றின் அடிப்படையில், பொது
மக்களிடம், கருத்துகளை பெற்று, அதன் அடிப்படையில் பதவி உயர்வு அல்லது
சம்பள உயர்வு அளிக்க, ஏழாவது சம்பள கமிஷன், மத்திய அரசுக்கு
பரிந்துரைத்தது.இந்த திட்டத்தை அமல்படுத்துவதற்கான மசோதாவை தயாரிக்கும்படி,
மத்திய அரசு உத்தரவிட்டதையடுத்து, மத்திய பணியாளர் மற்றும் பயிற்சி துறை,
சமீபத்தில் வரைவு மசோதா தயாரித்து வழங்கியுள்ளது.இதன்படி, அனைத்து
அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் இணையதளங்களில், ஊழியர்கள் மற்றும் பணிகள்
குறித்த விபரங்கள் வெளியிடப்படும். பொது மக்கள் தங்கள் அனுபவத்துக்கு ஏற்ப,
அளிக்கும் மதிப்பெண் அடிப்படையில், அதிகாரிகள், ஊழியர்களுக்கு பதவி உயர்வு
அல்லது சம்பள உயர்வு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.'அடுத்த ஆண்டு,
ஏப்.1 முதல், இத்திட்டம் அமல்படுத்தப்படும்' என, பிரதமர் அலுவலக அதிகாரிகள்
கூறினர்.
Half Yearly Exam 2024
Latest Updates
Home »
» அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு மதிப்பெண் அடிப்படையில் பதவி உயர்வு அளிக்க திட்டம்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...