சென்னை மத்திய தொழிற்சங்கங்கள், அடுத்த ஆண்டு, ஜனவரி, 8, 9ம் தேதிகளில், நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளன.மத்திய போக்குவரத்து தொழிற்சங்கங்களான, தொ.மு.ச., - சி.ஐ.டி.யு., - ஏ.ஐ.டி.யு.சி., - எச்.எம்.எஸ்., உள்ளிட்ட, 10க்கும் மேற்பட்ட சங்கங்களின் ஆலோசனை கூட்டம், நேற்று சென்னையில் நடந்தது.
இதில், ஜன., 8, 9ம் தேதிகளில், வேலை நிறுத்தம் செய்ய தீர்மானிக்கப்பட்டது.இது குறித்து, தொழிற்சங்கத்தினர் கூறியதாவது:மத்திய அரசு நிறைவேற்ற உள்ள, மோட்டார் வாகன சட்டத் திருத்தத்தை கைவிட வேண்டும். அரசு போக்குவரத்துக் கழகங்களில், பஸ்களின் எண்ணிக்கையை குறைப்பதை கைவிட வேண்டும். பணியாளர் எண்ணிக்கையை குறைத்து, தனியார் மயமாக்குவதை தவிர்க்க வேண்டும்.பழைய ஓய்வூதிய திட்டத்தை, மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜன., 8, 9ம் தேதிகளில், நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில், நாங்கள் ஈடுபட உள்ளோம்.அதற்கான ஆயத்த கூட்டங்கள், இன்று முதல், தமிழகம் முழுவதும் நடத்தப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Blog Archive

Recent Comments