சிவகங்கை: சிவகங்கையில்,
மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை செய்த சம்பவத்தையடுத்து, பள்ளி மாடிகளில் கம்பிவேலி அமைக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை செய்த சம்பவத்தையடுத்து, பள்ளி மாடிகளில் கம்பிவேலி அமைக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
சிவகங்கையில்
வெவ்வேறு தனியார் பள்ளிகளில் அடுத்தடுத்து இரண்டு மாணவியர் மாடியில்
இருந்து குதித்தனர்.ஒரு மாணவி இறந்தார்; மற்றொரு மாணவி மதுரை
மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். இச்சம்பவங்களால் கல்வித்துறை
அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.இதையடுத்து 'மாடிகளில் இருந்து கீழே
குதிக்க முடியாதபடி உடனடியாக கம்பிவேலி அமைக்க வேண்டும்; மொட்டை மாடிக்குச்
செல்ல முடியாதபடி கதவை பூட்ட வேண்டும்' என, உத்தரவிட்டனர். மேலும் தலைமை
ஆசிரியர், ஆசிரியர்களுக்கு மாணவர்களை வழிநடத்துவது குறித்து கவுன்சிலிங்
நடத்தவும் முடிவு செய்தனர்.கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:தவறு
செய்தாலும் மாணவர்களை அவமானப்படுத்தும் விதமாக எச்சரிக்க கூடாது என,
ஆசிரியர்களை அறிவுறுத்தியுள்ளோம். பாதுகாப்பு நடவடிக்கைகளை புகைப்படம்
எடுத்து அனுப்பவும் உத்தரவிட்டோம்.இவ்வாறு அவர் கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...