++ நீதிமன்றத்தில் அரசு அறிக்கை தாக்கல் செய்யாவிட்டால் வேலைநிறுத்தம் ~ Padasalai No.1 Educational Website
:::: MENU ::::
பாடசாலை வலைதளத்தின் செய்திகளை உடனுக்குடன் உங்கள் Telegram குழுவில் பெற - Click Here & Join - https://t.me/Padasalai_official
*வரும் 10 ஆம் தேதி நீதிமன்றத்தில் தமிழக அரசு,
அரசு ஊழியர் - ஆசிரியர் கோரிக்கைகளைப் பரிசீலனை செய்து அறிக்கை தாக்கல் செய்யாவிட்டால், மீண்டும் காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடங்குவோம் என்றார் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநிலப் பொதுச் செயலர் அன்பரசன் தெரிவித்தார்


*புதுக்கோட்டையில் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியது


*2016 ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்ட பழைய ஓய்வூதியத் திட்ட அறிவிப்பு இதுவரை தமிழக அரசால் செயல்படுத்தப்படவில்லை


*மேலும், எங்களுடைய கோரிக்கைகள் எதையும் நிறைவேற்றாததால் நாங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்தோம்


*ஆனால் நீதிமன்றத் தலையீட்டின் பேரில் எங்களுடைய போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்துள்ளோம்


*வரும் 10 ஆம் தேதி நீதிமன்றத்தில் தமிழக அரசு எங்களது கோரிக்கைகளைப் பரிசீலனை செய்து அறிக்கை தாக்கல் செய்யாவிட்டால், 10-ஆம் தேதிக்குப் பிறகு அனைத்து சங்கங்களையும் ஒன்றிணைத்து மீண்டும் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்குவோம்


*ஜெயலலிதா மறைவிற்குப் பின்னர் தமிழக அரசு அறிவித்தவற்றையே அவர்களால் செயல்படுத்த முடியவில்லை. முதல்வர் கூறிய ஒரு சில கருத்துகளால் தான் நாங்கள் போராட்டத்துக்குத் தள்ளப்பட்டோம்


*மக்கள் வரிப்பணத்தில் ஊதியம் வாங்கும் நாங்கள், புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எங்களுடைய ஒரு நாள் ஊதியமான ரூ. நூறு கோடியை முதல்வர் நிவாரண நிதிக்கு அளித்துள்ளோம்


*மேலும் சங்கத்தின் சார்பில் பல்வேறு நிவாரணப் பொருள்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன என்றார் அவர்

0 Comments:

Post a comment

Dear Reader,

Enter Your Comments Here...