அண்ணாமலைப் பல்கலை: தொலைதூர படிப்புகளுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

*கடலூர் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைப்
பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி இயக்கக படிப்புகளுக்கு விண்ணப்பிக்க அவகாசம் டிச.31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது

*இதுகுறித்து பல்கலைக்கழக பதிவாளர் கே.ஆறுமுகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு

*தொலைதூரக் கல்வி இயக்ககத்தில் பி.ஏ, பி.எஸ்சி, பி.காம், எம்.ஏ, எம்.எஸ்.சி, எம்.காம், எம்.பி.ஏ, ஐ.டி. உள்ளிட்ட படிப்புகளுக்கு விண்ணப்பம் விநியோகம் மற்றும் பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் வந்து சேருவதற்கான அவகாசம் 31-12-2018 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது

*எனவே, மாணவர்கள் விண்ணப்பங்களை பெறவும், நேரடி சேர்க்கைக்கும் அருகே உள்ள தொலைதூரக் கல்வி இயக்கக படிப்பு மையங்களை அனைத்து நாள்களிலும் அணுகலாம். தமிழ், ஆங்கிலவழி படிப்பும், நேரடி இரண்டாமாண்டு சேர்க்கையும் உண்டு

*படிப்பு மையம் மற்றும் சேர்க்கை தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு உதவி மையத்தை 04144 - 238043, 238044, 238045, 238046, 238047 என்ற எண்களிலும், ddedirector2013@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்புகொள்ளலாம்

*விண்ணப்பங்களை www.audde.in என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அதில் தெரிவித்துள்ளார்

Share this