'ஜாக்டோ
- ஜியோ' சார்பில், இன்று துவங்க இருந்த வேலை நிறுத்தத்தை, தற்காலிகமாக
ஒத்திவைப்பதாக, சங்கங்கள் அறிவித்துள்ளன.'பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை
ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 'சம்பள
முரண்பாடுகளை களைய வேண்டும்' உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக அரசு
ஊழியர், ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான, 'ஜாக்டோ - ஜியோ' சார்பில்,
இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டது.
இதை எதிர்த்து, மதுரை வழக்கறிஞர் லோகநாதன், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நேற்று தாக்கல் செய்த அவசர மனு:'கஜா' புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், நிவாரணப் பணி மேற்கொள்ள வேண்டும். பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டுத் தேர்வு துவங்க உள்ளது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது ஏற்புடையதல்ல.வேலை நிறுத்தத்தால், நிவாரணம், அரசுப் பணிகள் முடங்கும். பிரச்னைக்கு பேச்சு மூலம் தீர்வு காண வேண்டும். வேலை நிறுத்தம் செய்வது, உச்ச நீதிமன்ற உத்தரவு, அரசு ஊழியர்களின் பணி விதிகளுக்கு எதிரானது. வேலை நிறுத்தத்திற்கு தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு மனு செய்தார்.
மதியம், 1:00 மணிக்கு நீதிபதிகள், கே.கே.சசிதரன், ஜி.ஆர். சுவாமிநாதன் அமர்வு விசாரித்தது.விவாதம் வருமாறு:'ஜாக்டோ - ஜியோ' தரப்பு வழக்கறிஞர்: புயல் நிவாரணமாக, அரசு ஊழியர்கள் ஒரு நாள் சம்பளம், 100 கோடி ரூபாயை வழங்கியுள்ளனர். வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ள அதே நேரத்தில், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில், தொடர்ந்து நிவாரணப் பணிகளில், அரசு ஊழியர்கள் ஈடுபடுவர்.டில்லி, ஆந்திரா, கேரளாவில் பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 'பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர நடவடிக்கை எடுக்கப்படும்' என, முதல்வராக இருந்த ஜெயலலிதா, சட்டசபையில் அறிவித்தார்.
இதன்படி, ஒரு நபர் கமிஷன் அமைக்கப்பட்டது. ஏழாவது சம்பளக் கமிஷனின் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும். இது தொடர்பாக அமைக்கப்பட்ட சித்திக் கமிஷன், அறிக்கை தாக்கல் செய்யவில்லை. ஏழாவது சம்பளக் கமிஷனில், நிலுவைத் தொகையை வழங்கவில்லை.பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஸ்ரீதர் கமிஷன், நவ., 27ல் அறிக்கை சமர்ப்பித்தது. ஆனால், நவ., 6ல் முதல்வர், 'பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த மாட்டோம்' என, தெரிவித்து விட்டார். பிரச்னைகள் தொடர்பாக, ஏற்கனவே உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அரசு நிறைவேற்றவில்லை.
நீதிபதிகள்: வேலை நிறுத்தத்தால், மக்களுக்கு பாதிப்பு ஏற்படும். 'கஜா' புயலால் பல மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. வேலை நிறுத்தத்தால், நிவாரணப் பணி பாதிக்கும்.இவ்விவகாரத்தில், இந்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நிறைவேற்ற, அரசு எடுத்த நடவடிக்கை குறித்து, டிச., 10ல் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்படும். அதுவரை போராட்டத்தை நிறுத்தி வைக்க, சங்க நிர்வாகிகளிடம் விபரம் பெற்று, மதியம், 1:25 மணிக்கு தெரிவிக்க வேண்டும்.இவ்வாறு விவாதம் நடந்தது.மதியம், 1:25 மணிக்கு, 'ஜாக்டோ - ஜியோ' வழக்கறிஞர், 'வேலை நிறுத்தத்தை, டிச., 10 வரை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக நிர்வாகிகள் உறுதி அளித்துள்ளனர்' என்றார்.
இதை பதிவு செய்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:கடந்த, 2017 செப்., 21ல் இந்நீதிமன்றம், 'சம்பளக் கமிஷன் பரிந்துரையை, 2017 செப்., 30க்குள் சமர்ப்பிக்க வேண்டும். அதை தொடர்ச்சி 14ம் பக்கம்ஜாக்டோ - ஜியோ...முதல் பக்கத் தொடர்ச்சிநடைமுறைப்படுத்துவது குறித்து, அரசு, 2017 அக்., 13க்குள் முடிவை தெரிவிக்க வேண்டும். இதில், கால அவகாசம் தேவைப்படும் பட்சத்தில், இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும். ஓய்வூதியத் திட்டம் தொடர்பான குழு, எப்போது அறிக்கை சமர்ப்பிக்கும் என்பதை, அரசு தெரிவிக்க வேண்டும்' என உத்தரவிட்டது. இதை நிறைவேற்றவும், ஸ்ரீதர் கமிஷன் அறிக்கையின் மீது மேற்கொண்ட நடவடிக்கை குறித்தும், தமிழக தலைமைச் செயலர், உள்துறை செயலர், டிச., 10ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு உத்தரவிட்டனர்.
சிறப்பு வகுப்புகள் : வரும், 10ம் தேதி அரையாண்டு தேர்வு துவங்க உள்ள நிலையில், ஒரு மாதமாக ஆசிரியர்கள் பலர், போராட்ட ஆயத்த பணிகளில் ஈடுபட்டனர். இதனால், பல பள்ளிகளில், பாடங்கள் நடத்துவதில் பின்னடைவு ஏற்பட்டது.போராட்டத்தை, ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பு ஒத்தி வைத்துள்ளதால், அரையாண்டு தேர்வுக்கான பாடம் நடத்தும் பணிகளை தீவிரப்படுத்த, ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, மாவட்ட கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர்.'பாக்கி இருக்கும் பாடங்களை ஒரு வாரத்திற்குள் நடத்தி முடிக்க வேண்டும். நேர பற்றாக்குறை இருந்தால், காலை, மாலை சிறப்பு வகுப்புகள் நடத்தி, 10ம் தேதிக்குள் பாடங்களை முடிக்க வேண்டும்' என, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...