மழை விடுமுறை காரணமாக, வடமாவட்டங்களில், இன்று பல்வேறு பள்ளிகள், வேலை'நாளாக அறிவித்துள்ளன.வடகிழக்கு பருவ மழை மற்றும் கஜா புயல் காரணமாக, கடலுார், நாகை, திருவாரூர், விழுப்புரம், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு, இரண்டு வாரங்களுக்கு முன், பள்ளி வேலை நாளில் விடுமுறை அளிக்கப்பட்டது.
இந்த நாளை ஈடுகட்டும் வகையில், சனிக்கிழமையை வேலை நாட்களாக மாற்றி கொள்ள, பள்ளி கல்வி துறை உத்தரவிட்டது.இதை பின்பற்றி, திருவாரூர், கடலுார் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில், இன்று வேலை நாள் என, பள்ளி கல்வி துறை அறிவித்து உள்ளது.சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில், பல பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களே முடிவு எடுத்து, இன்று பள்ளிகள் இயங்கும் என, அறிவித்துள்ளனர்.இதுகுறித்து, அந்தந்த தனியார் பள்ளிகள் சார்பில், பெற்றோரின் மொபைல்போனுக்கு, எஸ்.எம்.எஸ்., அறிவிப்பு செய்யப்பட்டுஉள்ளது.

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Blog Archive

Recent Comments