ஆசிரியர்களுக்கான 'ஒர்க் பிளேஸ்' சமூக வலைதளம்: கற்பித்தல் முறை பரிமாற்றம் செய்வதில் முதன்மை

ஆசிரியர்களுக்கான
'ஒர்க் பிளேஸ்', சமூக வலைதளம், பல்வேறு
இணைசெயல்பாடுகளும், கற்பித்தல் முறைகளையும் பரிமாற்றம் செய்வதில் முதன்மையாக மாறி வருகிறது.

மாணவர்களுக்கு புதுவிதமான கற்பித்தல் முறையால், கற்றலை எளிமையாக்க வேண்டும் என்பதற்காக ஆசிரியர்களுக்கு பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. வெவ்வேறு பகுதிகளில் உள்ள ஆசிரியர்கள் அவரவர் பள்ளிகளில் செயல்படுத்தியுள்ள புதியமுயற்சிகளை, மற்ற பள்ளிகளிலும் செயல்படுத்த கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனங்கள் பதிவுகளையும் மேற்கொண்டன.
தொழில்நுட்ப வளர்ச்சியால், தற்போது, ஆசிரியர்களுக்கு தகவல் பரிமாற்றமும், மற்ற பள்ளிகளில் நடக்கும்புதுவிதமான செயல்பாடுகளை, அவரவர்பள்ளிகளில் செயல்படுத்தவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.சமூக வலைதளத்தில், அரசு பள்ளி ஆசிரியர்களுக்கென, 'ஒர்க் பிளேஸ்', என்ற புதிய பக்கத்தைகல்வித்துறையினர் உருவாக்கியுள்ளனர்.
இதில், பள்ளிகளில் உள்ள செயல்பாடுகள், விழாக்கள், நிகழ்ச்சிகள், கற்றல் மற்றும்கற்பித்தல் முறை, மேம்பாட்டு பணிகள் என அனைத்தும் பதிவிடப்படுகின்றன.விருப்பமுள்ள ஆசிரியர்கள், அவரவர் இ-மெயில் முகவரி மூலம், பதிவு செய்து, உறுப்பினராகிக்கொள்ளலாம். ஆசிரியர்களுக்கு மட்டுமே என்பதால், அனைவரிடமும் ஆர்வமும் அதிகரித்து வருகிறது.கடைக்கோடி கிராமத்தில் இருக்கும்பள்ளியில் உள்ள சிறப்புகளையும் இதில் பதிவிட்டு, மற்ற பள்ளிகள் அறியும் வகையில், ஆசிரியர்கள் ஆர்வமுடன் செயல்படுகின்றனர்.

Share this