++ வரும் கல்வி ஆண்டுமுதல் பள்ளி தொடக்க நாளிலேயே மடிக்கணினி-சைக்கிள்: அமைச்சர் செங்கோட்டையன்! ~ Padasalai No.1 Educational Website
:::: MENU ::::
பாடசாலை வலைதளத்தின் செய்திகளை உடனுக்குடன் உங்கள் Telegram குழுவில் பெற - Click Here & Join - https://t.me/Padasalai_officialகோபிச்செட்டிப்பாளையம்:

வரும் கல்வி ஆண்டுமுதல் பள்ளி தொடக்க நாளிலேயே மாணவ மாணவிகளுக்கு இலவச மடிக்கணினி- இலவச சைக்கிள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று கல்வி அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

கோபிச்செட்டிப்பாளையம் அரச பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மாணவ மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை தமிழக அமைச்சர் செங்கோட்டையன் வழங்கினார்.

அப்போது நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர்,. தமிழகத்தில் 11 லட்சத்து 11 ஆயிரம் மாணவர்களுக்கு சைக்கிள்கள் வழங்கப்பட்டு உள்ளது, வரும் ஜனவரி மாதம் 11-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு மாணவ - மாணவிகளுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படும் என்றார்.


இனிமேல் வரும் கல்வி ஆண்டு முதல் பள்ளி திறக்கும் முதல் நாளிலேயே மாணவர்களுக்கு மடிக்கணினி, சைக்கிள்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்றவர், இந்த ஆண்டு நீட் தோவுக்கு தமிழகத்தில் இருந்து 26,000 மாணவா்கள் விண்ணப்பித்து உள்ளனர் என்றார்.

தமிழக அரசு மாணவ மாணவிகளுக்கு கல்வியை போதிக்கும் வகையில் தற்போது தொலைநோக்கு பார்வையுடன் செயல்பட்டு வருகிறது என்றவர், யுடியூடிப் மூலம் மாணவர்களுக்கு பாடம் சொல்லித் தர ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதற் காக மத்திய அரசுடன் இணைந்து 671 பள்ளிகளில் தலா ரூ20 லட்சம் மதிப்பீட்டில் ஜன.15-க்குள் அறிவியல் ஆய்வகம் அமைக்கப்பட்டு வருகிறது.

இது ஜனவரியில் செயல்பாட்டு வரும் அதன்படி, 9 ,10, 11, 12 ஆகிய வகுப்புகள் முற்றிலும் கணினிமயமாக்கப்பட்டு இணையதள வசதிகள் செய்து கொடுக்கப்படும் என்றார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையனிடம், சில பள்ளிகளில் கொலுசு பூ வைக்க அனுமதி மறுக்கப்படுகிறதே என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அமைச்சர், மாணவிகள் பூ வைப்பதில் எந்த ஆட்சேபனையும் இல்லை என்றவர், மாணவிகள் கொலுசு அணிந்து வருவதால் மாணவர்களின் கவனம் திசை திருப்பப்பட்டு படிப்பு பாதிக்கப்படும். கொலுசு அணிந்து வருவதற்கு பள்ளிக்கல்விதுறை தடை விதித்துள்ளது குறித்து என் கவனத்திற்கு வரவில்லை.
இவர் அவர் கூறினார்.

Tags: from Next academic year Schools starting day try to provide Free Laptop and by-cycle, said MInister Sengottaiyan, வரும் கல்வி ஆண்டுமுதல் பள்ளி தொடக்க நாளிலேயே மடிக்கணினி-சைக்கிள்: அமைச்சர் செங்கோட்டையன்

1 comment:

  1. So I this year studying in 11th std so get laptop on this year?

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...