கெமிஸ்ட்ரி ஆசிரியரின் வித்யாசமான அழைப்பிதழ் - அறிவியல் பூர்வமாக வாழ்த்து தெரிவித்த சசிதரூர்வேதியியல் ஆசிரியரின் திருமண அழைப்பிதழுக்கு காங்கிரஸ் எம்பி சசிதரூர் செய்த ட்விட்டர் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

'கெமிஸ்டிரி டீச்சரின் திருமண அழைப்பிதழ்' என்ற பெயரில் கடந்த சில தினங்களாக சமூக வலைதளங்களில் வித்தியசமான திருமண அழைப்பிதழ் ஒன்று பரவி வருகிறது. இந்த அழைப்பிதழில் மணமக்களின் பெயர்கள் வேதியியல் பாடங்களில் வரும் குறியீடுகள் போன்று வடிவமைக்கப்பட்டுள்ளன.

இந்த அழைப்பிதழில் நடைபெறும் மணமக்களுக்கு இன்று(14-12-2018)கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடந்தது. இத்தகைய அழைப்பிதழை காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கார்த்திக் என்பவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டார். அதுமட்டுமின்றி, காங்கிரஸ் எம்பி சசிதரூர் தொகுதியில் அந்த கெமிஸ்ட்ரி டீச்சரின் திருமணம் நடைபெறுவதாகவும் கார்த்திக் குறிப்பிட்டுள்ளார்.
இதனை டீட்வீட் செய்த சசிதரூ, 'அழைப்பிதழில் குறிப்பிடப்பட்ட மணமக்களுக்கு கெமிஸ்ட் ஸ்பார்க்கிள் ஆகட்டும், பிசிக்ஸ் வெளிச்சத்தை ஏற்படுத்தட்டும், பயாலஜி அழகான குழந்தைகளை அளிக்கட்டும் ' என வாழ்த்தியுள்ளார்.

அறிவியல் பெயர்களை கொண்டு வித்தியாசமாக உருவாக்கப்பட்ட அழைப்பிதழுக்கு அறிவியல் ரீதியாகவே சசிதரூர் வாழ்த்து தெரிவித்தது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Share this

1 Response to "கெமிஸ்ட்ரி ஆசிரியரின் வித்யாசமான அழைப்பிதழ் - அறிவியல் பூர்வமாக வாழ்த்து தெரிவித்த சசிதரூர்"

Dear Reader,

Enter Your Comments Here...