Hi Teachers!

Kindly Send Your Study Materials & Model Questions to Our Email ID - padasalai.net@gmail.com

(S.Harinarayanan ,GHSS ,Thachampet)'Piper nigrum' என்ற தாவரவியல் பெயரைக்கொண்ட, Piperaceae தாவர குடும்பத்தை சேர்ந்த மிளகு  கொடி வகையைச் சேர்ந்த  தாவரமாகும். கொடியில் கனிகள் காய்ந்தவுடன் சிறந்த நறுமணத்தை தருகிறது. அதனால் மசாலாக்களில் தலைசிறந்த நறுமணப் பொருளாகிறது. உலகிலேயே கேரள மாநிலத்தில்தான் மிளகு அதிகம் உற்பத்தியாகின்றது. பழங்காலத்தில் வணிகத்தில் மதிப்பு மிக்க பொருளாக இருந்தது மிளகு.
அதனால் இது கறுப்பு தங்கம் என்றழைக்கப்பட்டது.  மிளகு, வால் மிளகு என இரண்டு வகை இருந்தாலும் பதப்படுத்தும் முறையின் அடிப்படையில் கரு மிளகு, வெண் மிளகு, சிவப்பு மிளகு, பச்சை மிளகு என பலவகைகள் உள்ளன.பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்' என்பது பழமொழி. அந்த அளவுக்கு திறன் படைத்தது மிளகு. மிளகை வீணடித்தால் உப்பு போட்டு அதில் நாள் முழுவதும் மண்டியிட வைக்கும் தண்டனை போர்ச்சுகல் நாட்டில் நடைமுறையில் இருந்தது. 

மருத்துவ பயன்கள்!

சுக்கு மற்றும் திப்பிலியுடன் மிளகு  சேர்த்து `திரிகடுகம்' என்று அழைப்பார்கள். இது பல மருந்துகளுக்கு அனுபானமாக பயன்படுத்தப்படும். இது நுரையீரல் மற்றும் செரிமான மண்டலப் பிரச்னைகளைத் தீர்க்கக்கூடியது.

திரிகடுகம் பொடியில் ஒரு கிராம் அளவு எடுத்து தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் சளி, இருமல் உள்ளிட்ட கப நோய்கள் குணமாகும்.

மேலும், குறிப்பாக நெஞ்சுச்சளி, ஜலதோஷத்துக்கு இது சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருந்தாக செயல்படும். பசும்பாலுடன் சம அளவு தண்ணீர் கலந்து 10 பூண்டுப்பற்களை தோலுரித்துச் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். ஓரளவு வெந்ததும் மிளகுத்தூள், மஞ்சள்தூள், பனங்கற்கண்டு சேர்த்து ஒரு கொதி விட்டு அடுப்பிலிருந்து இறக்கி நன்றாகக் கடைந்து குடித்து வந்தால் நெஞ்சுச்சளியும் ஜலதோஷமும் விலகி நிற்கும். இதை இரவு உறங்கப்போவதற்குமுன் அருந்தினால் சளியின் ஊதுகுழல்களான இருமல், மூக்கடைப்பு விலகி நிம்மதியான தூக்கம் வரும். மறுநாள் காலை அதன் முழுப்பலனை உணர முடியும்.

மிளகுத்தூளை தேன் கலந்து சாப்பிட்டால் வறட்டு இருமல் உடனே நிற்கும். தேனுக்குப் பதில் பனங்கற்கண்டு சேர்த்துக் கொள்ளலாம்.

மிளகுத்தூளுடன் கிராம்புத் தைலம் சேர்த்து பற்களின்மீது தடவி வந்தால் பல்வலி குணமாகும். இதேபோல் மிளகுத்தூளுடன் உப்பு சேர்த்து பல் துலக்கினால் பற்கள் பளிச்சிடுவதோடு பல் வலி வராமல் பாதுகாக்கும்.

மிளகுத்தூளுடன் வெங்காயம், உப்பு சேர்த்து தலையில் புழுவெட்டு உள்ள இடங்களில் பூசி வந்தால் அந்த இடத்தில் முடி வளரும்.

சந்தனம்,ஜாதிக்காயுடன் மிளகைச் சேர்த்து அரைத்து முகப்பருக்களின் மீது பற்று போட்டு வந்தால் விரைவில் உதிர்ந்துவிடும்.

திரிகடுகத்துடன் கல் உப்பு, பெருஞ்சீரகம் சேர்த்துப் பொடியாக்கி இரண்டு முதல் நான்கு கிராம் வரை உணவுக்குப்பின் மென்று தின்று வந்தால் செரிமானக்கோளாறு நீங்கி வயிற்று நோய்களைப் போக்கும்.மிளகில் உள்ள பெப்பரின் என்னும் பொருள், வயிற்றில் ஹைட்ரோகுளோரிக் ஆசிட் உற்பத்தியை அதிகரித்து, செரிமான பிரச்சனைக்கு நல்ல தீர்வைத் தரும். 

மிளகுப்பொடி
10 துளசி இலைகளுடன் ஐந்து மிளகைச் சேர்த்து 200 மி.லி நீர் விட்டு கொதிக்க வைத்துக் குடித்து வந்தால் கோழை கட்டுதல் நீங்கும்.

பாக்டீரிய எதிர்ப்பு!

மிளகில் ஆன்டி-பாக்டீரியல் சக்தி அதிக அளவில் இருப்பதால், செரிமான மண்டலத்தின் ஆரோக்கியம் சீராகும். தினமும் உணவில் மிளகு சேர்த்து வந்தால், மிளகில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் தன்மை உடலினுள் நுழையும் பாக்டீரியாக்களை எதிர்த்து போராடி, உடலில் பாக்டீரியாவினால் ஏற்படும் நோய்களை தடுத்து, உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும்.

ஆஸ்துமாவால் அவதிப்படுபவர்கள் ஐந்து மிளகைச் சேர்த்து மென்று தின்று வந்தால் பிரச்னை தீரும்.

மிச்சிகன் பல்கலைக் கழக புற்றுநோய் ஆய்வு மையத்தின் ஆய்வின் படி கேன்சர் கட்டிகள் வளர்ச்சியை தடுப்பது மிளகு. மிளகுடன் மஞ்சள் சேர்த்தால் புற்றுநோய் எதிர்ப்புப் பலன்கள் அதிகரிப்பதாக அந்த ஆய்வு தெரிவித்துள்ளது.
 
மேலும் மிளகில் உள்ள வைட்டமின் ஏ, சி, கரோடின்கள், மற்றும் பிற சத்துக்கள் உடலில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல்களை அகற்றி நோயிலிருந்து நம்மை பாதுகாக்கிறது.

விஷம் முறிக்கும் மிளகு!

விஷக்கடிகளுக்கும் மிளகு நல்லதொரு மருந்தாக அமையும். 100 மி.லி வெற்றிலைச் சாற்றில் 35 கிராம் மிளகைச் சேர்த்து 12 மணி நேரம் நன்றாக ஊற வைத்து உலர்த்திப் பொடியாக்கி வைத்துக்கொள்ள வேண்டும். இதை தினமும் காலை மாலை என இருவேளையும் சாப்பிட்டு தண்ணீர் குடித்து வந்தால் பூரான் விஷம் இறங்கும். அப்போது உணவில் புளி, நல்லெண்ணெய் சேர்க்கக்கூடாது. தேள் கடித்தால் 20 மிளகை சம அளவு தேங்காய் சேர்த்து மென்று தின்று வந்தால் விஷம் படிப்படியாக இறங்கும்.

மிளகிற்கு வீக்கத்தைக் குறைக்கும் பண்பும் (Anti-inflamattory), வாதத்தை அடக்கும் பண்பும் (Anti vatha), பசியைத் தூண்டும் பண்பும் (Appetizer), வெப்பத்தைக் குறைக்கும் பண்பும் (Antypyretic), கோழையை அகற்றும் பண்பும் (Expectorant), பூச்சிக்கொல்லியாக செயல்படும் பண்பும் (Anti-helmenthetic)உள்ளது.

 உள்ளதுமிளகில் உள்ள சத்துக்கள் :
 கால்சியம்,பொட்டாசியம்,ஜிங்க், மாங்கனீசு, இரும்புச் சத்து மற்றும் மெக்னீசியம்,பாஸ்பரஸ்,தயாமின்,ரியாசின்,
ரிபோஃப்ளேவின்,
வைட்டமின் C மற்றும் 
piperine என்ற ஆல்கலாய்டு,மிளகில் எளிதில் ஆவியாகும் எண்ணெய்,ஆல்கலாய்டு, புரதம், கனிமங்கள் உள்ளன. பிபிரைன், பெருபிரைன்,
பிபிரோனால், கேம்பினி
, அஸ்கோர்பிக் அமிலம், கரோட்டின் ஆகியவை பிரித்தெடுக்கப்பட்டுள்ளன

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Categories

Blog Archive

Total Pageviews

Recent Comments