தேனி
வேலை வாய்ப்பு அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் கல்வித்தகுதியை பதிவு
செய்யும் வகையில் சிறப்பு பிரிவு துவக்கப்பட்டுள்ளது,'' என, கலெக்டர்
பல்லவிபல்தேவ் தெரிவித்துள்ளார்
அவரது அறிக்கை
மாவட்ட
வேலை வாய்ப்பு அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் வேலை வாய்ப்பிற்காக,
தங்களது கல்வித் தகுதியை பதிவு செய்யும் வகையில் சிறப்புப் பிரிவு
துவங்கப்பட்டுள்ளது
இதுவரை உறுப்பு குறைபாடுகள் கொண்டோர்
மட்டுமே கல்வித்தகுதியை பதிவு செய்யும் வசதி இரு ந்தது.கண்பார்வையற்ற,
காதுகேளாத, வாய்பேச முடியாதவர்கள் சென்னை வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலமே
பதிவு செய்து வந்தனர்
அந்த நிலை மாற்றப்பட்டு, அந்தந்த மாவட்டங்களில்
அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளும் கல்வித் தகுதிகளை பதிவு செய்திடும்
வகையில் தொழில்நுட்ப வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. இதனை பயன்படுத்தி
பயனடைய வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...