மதுரை மாவட்டம், டி.கல்லுப்பட்டியைச் சேர்ந்த மணிகண்டபிரபு,
ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:கடந்த 26.7.2017ல் சிறப்பு
ஆசிரியர் பிரிவில் காலியாகவுள்ள 632 உடற்கல்வி ஆசிரியர் பணியிடத்தை
நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியானது. இதற்கான தேர்வில் 70 மதிப்பெண்
பெற்றேன். பணி வழங்குவதற்கான சீனியாரிட்டி எனக்கு கிடைத்தது. இதன்படி
சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்றேன். அப்போது, உடற்கல்வி ஆசிரியர்
பணிக்கான கல்வியில் உயர்தகுதி பெற்றதற்கான சான்றிதழ் பெறவில்லை என கூறினர்.
ஓராண்டு வகுப்பான இந்த படிப்பு கடந்த 2004ல் கைவிடப்பட்டது
என்பதை விளக்கினேன். இதன்பிறகு வெளியான தேர்வானவர்களின் பட்டியலில் என்
பெயர் இல்லை. உரிய கல்வித்தகுதி பெறவில்லையென அதில் கூறப்பட்டுள்ளது. உரிய
தகுதி இருந்தும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. எனவே, நீதிமன்றம் தலையிட்டு
முடிவுகள் அடிப்படையில் மேல் நடவடிக்கை எடுக்க தடை விதிக்க வேண்டும்.
கவுன்சலிங்கிற்கு என்னை அழைக்கவும், எனக்கு உடற்கல்வி சிறப்பு ஆசிரியர் பணி
வழங்கவும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இதேபோல், மேலும் பலர் மனு
செய்திருந்தனர். இந்த மனுக்களை நேற்று விசாரித்த நீதிபதி ஜி.ஜெயசந்திரன்,
உடற்கல்வி சிறப்பு ஆசிரியர் பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பு தெளிவாக
இல்லை. அறிவிப்பில் முரண்பாடு உள்ளது. எனவே, உடற்கல்வி சிறப்பு ஆசிரியர்
நியமனம் தொடர்பான ஒட்டுமொத்த நடைமுறைகளும் ரத்து செய்யப்படுகிறது என
உத்தரவிட்டுள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...