பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் வெள்ளிக்கிழமை (டிச.21) வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். இதன் காரணமாகவும், அதன் பின்னர் தொடர்ச்சியாக விடுமுறைகள் வருவதனாலும், அடுத்த சில நாள்களுக்கு வங்கி சேவைகள் முடங்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
மாநிலத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட 9 வங்கி ஊழியர் சங்கங்களில் குறிப்பிட்ட சில சங்கங்கள் மட்டும் வெள்ளிக்கிழமையன்று வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளன.
ஊதிய உயர்வு மற்றும் ஒப்பந்த நடைமுறைகளை மாற்றியமைப்பது உள்ளிட்டவை அச்சங்கங்கள் முன்வைக்கும் பிரதான கோரிக்கைகள்.
அதன் தொடர்ச்சியாக வரும் 26-ஆம் தேதி 9 சங்கங்களும் இணைந்து நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளன. தேனா வங்கி, விஜயா வங்கி, பேங்க் ஆஃப் பரோடா ஆகிய வங்கிகளை இணைப்பதற்கு எதிராக இந்த நிலைப்பாட்டை வங்கி ஊழியர் சங்கங்கள் எடுத்துள்ளன. இப்போராட்டத்தில் சுமார் 10 லட்சம் பேர் பங்கேற்பார்கள் எனத் தெரிகிறது.
வேலை நிறுத்தப் போராட்டங்களை ஒட்டி வார விடுமுறைகளும், கிறிஸ்துமஸ் விடுமுறையும் வருவதால் வங்கி சேவைகள் தொடர்ச்சியாக முடங்கக் கூடும் எனத் தகவல்கள் வெளியாகின.
ஆனால், அதை மறுத்துள்ள ஊழியர் சங்கங்கத்தினர், வரும் திங்கள்கிழமை (டிச.24) வழக்கம்போல வங்கிகள் செயல்படும் என்றும், தொடர்ந்து சேவைகள் முடங்காது என்றும் தெரிவித்துள்ளனர்

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Blog Archive

Recent Comments