(S.Harinarayanan, GHSS Thachampet)
இன்றைய
சூழலில் ஆண்,பெண் வேறுபாடின்றி காலை கண் விழிக்கும் கணம் முதல் இரவு
தூங்கப் போகும் வரை முகம் கழுவ ஒரு கிரீம், முகம் கழுவிய பின் தடவிக் கொள்ள
ஒரு கிரீம். குளிக்க உடம்புக்கு ஒரு சோப், முகத்துக்கு வேறு ஒரு கிரீம்.
கை, கால் சரும அழகைப் பாதுகாத்து அவற்றை மிருதுவாக்க மற்றொரு கிரீம்
அல்லது லோஷன், முகம் என்று எடுத்துக் கொண்டால் மூக்கு, கண்கள், உதடு என்று
எல்லா உறுப்புகளுக்கும் தனித்தனி கிரீம்கள் அல்லது லோஷன்கள்
பயன்படுத்துகின்றனர்.உச்சி முதல் உள்ளங்கால் வரை தேய்த்துக் கொள்ள
ஆயிரமாயிரம் கிரீம்களும், லோஷன்களும், சோப்களுமாக தினம் தினம் இப்படி
அமிலங்களிலும், காரங்களிலும் முங்கி எழுந்து கொண்டு இருக்கிறோம், எல்லாம்
எதற்காக? பெரும்பான்மை பதில் முகப்பொலிவை பாதுகாக்க என்பதாகவே
இருக்கிறது. ஆனால் யோசித்துப் பாருங்கள் நம் அம்மாக்கள், பாட்டிகளில்
அந்தந்த வயதுக்குரிய அழகான முகப் பொலிவுடன் எத்தனையோ லட்சம் பேர்கள்
நம்மோடு வாழ்ந்து கொண்டு தானே இருக்கிறார்கள், அவர்கள் காலத்தில் ஏது
இத்தனை கிரீம்கள்?! இத்தனை விளம்பரங்கள்?.
ஆபத்தான வேதிப்பொருட்கள்:
பெரும்பாலான முகப்பொலிவு கிரீம் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் மூலப் பொருட்களில் மெர்குரி,ஹைட்ரொக்யுனோன்,ஸ்டீரா ய்டுகள் போன்ற வேதிப்பொருட்கள் உள்ளதால் அதிக நேரம் வெயிலில் இருக்க வேண்டிய சூழலில் இவை தோல் புற்று நோயை உண்டாக்க வல்லவை.
கிரீம்கள் அழகு தருமா?
நம்
சருமத்தில் மெலனின்(Melanin) என்று ஒரு நிறமி உண்டு.நம் தோலுக்கு நிறத்தை
கொடுப்பது இந்த மெலனின் தான்! வெயிலில் நம் தோல் கறுத்து போவதற்கு முக்கிய
காரணம் இந்த மெலனின் தான். மெலனின் அளவு அதிகரிக்கும் போது தோல் கறுத்து
போகும்.. மெலனின் அளவு கம்மியாக இருக்கும் போது தோல் வெளுப்பாக தெரியும்!
இந்த முகப்பொலிவு கிரீம்கள் எப்படி வேலை செய்கிறது என்றால் , நம்
சருமத்தில் மெலனினை அதிகரிக்க செய்யும் தைரோசினேஸை(Tyrosinase ) தடுப்பதன்
மூலம் வெள்ளையாக்குது! இவ்வாறு தைரோசினேஸை தடுப்பதற்காக கிரீம்களில்
சேர்க்கப்படும் வேதியல் பொருள் ஹைட்ரோகுயினோன் (Hydroquinone ). இந்த
முகப்பொலிவு கிரீம்கள் நம் சருமத்தின் மேலோட்டத்தில் மட்டுமே செயல்
புரிகின்றது! இது போல மெலனின் அதிகரிப்பை வேதியல் பொருட்களால் தடுத்து
நிறுத்தி விடும் போது ,சருமத்தில் கேன்சர் (Cancer) வருவதற்கான
வாய்ப்புகள் அதிகம்! இந்த ஹைட்ரோகுவினோனை(Hydroquinone) நிறைய நாடுகள்
தடை செய்து உள்ளன!.
நிறைய முகப்பொலிவு கிரீம்களில்
ஹைட்ரோகுயினோனோடு(Hydroquinone ), ஸ்டீராய்டுகள் (Steroid )
சேர்க்கபடுகின்றன. நெடுங்காலம் இதை உபயோகிக்கும் போது தோல் புற்று நோய்
வருவது உறுதி! மேலும் கல்லீரல் பாதிப்புகள் உண்டாகும்.
பெட்னோவேட்(Betnovate ) போன்ற ஸ்டீராய்டுகள் உள்ள முகப்பொலிவு கிரீம்களை
உபயோகிக்கும் போது நாளடைவில் முகம் பாழாய் போய் விடும்.
மெர்குரி
சேர்த்த கிரீம்களை உபயோகிப்பவர்களுக்கு தோல் நிற மாற்றம் உண்டாகும் . சரும
எரிச்சலும் , அரிப்பும் உண்டாகி , காலத்துக்கும் அழியாத வடுக்களை
முகத்தில் உண்டாக்கி விடும். மேலும் , மெர்குரி ஒரு நச்சு பொருள். அது நம்
நரம்பு மண்டலத்தில் பாதிப்புகள் உண்டாக்கி விடும். அதனால் பதட்டம், மன
அழுத்தம் , மன நோய் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்!
மகத்துவம் வாய்ந்த மஞ்சள் :
இயற்கை
அளித்த மஞ்சள் மட்டுமே பெண்களின் முகத்திற்கு நமது மண்ணின்
சீதோஷ்ணநிலைக்கு ஏற்றது.இயற்கையை தவிர்த்து செயற்கையான கிரீம்களை நம்பி
எத்தனையோ பேர் முக அழகை இழந்து மன உளைச்சல் அடைந்துள்ளனர் என்பதை நினைவில்
வையுங்கள்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...