NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

மண்ணூர்மலை, அரசுப்பள்ளியில் தேசிய கணித தினம் கொண்டாடப்பட்டது

சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியம், மண்ணூர் மலை,ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கணித மேதை இராமானுஜன் அவர்களின்  131வது பிறந்த தினம் கொண்டாடப்பட்டது  முன்னதாக  உதவி தலைமை ஆசிரியர் வெங்கடாசலம் தலைமையில் இராமானுஜன் திருவுருவப்படத்திற்கு மற்றும் மாணவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்
பின்னர் கணித ஆசிரியர் பால்குமார்
இராமானுஜன் எண் 1729 பற்றியும் அவருடைய ஆய்வுகளில் தியரி ஆஃப் ஈகுவேசன்ஸ், தியரி ஆஃப் நம்பர்ஸ் டெஃபினிட், இன்ட்டக்ரல்ஸ் தியரி ஆஃப் பார்டிஷன்ஸ், எலிப்டிக் ஃபங்ஷன்ஸ் அண்ட் கண்டினியூடு ஃப்ராக்சன்ஸ் எனும் நிலைப்பாடுகள் மிகச் சிறந்தவை .

*1914ஆம் ஆண்டுக்கும் 1918ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் இவர் 3000க்கும் அதிகமான புதுக் கணிதத் தேற்றங்களில் கண்டுபிடித்த உண்மைகள் இன்று இயற்பியல் துறை முதல் மின்தொடர்புப் பொறியியல் துறை வரை பல துறை உயர்மட்டங்களில் அடிப்படையாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது  என மாணவர்களுக்கு கூறினார்  .

*அடுத்து அறிவியல் ஆசிரியர் ஜோசப் ராஜ் கணிதமேதை இராமானுஜன் ஈரோட்டில்  1887ம் ஆண்டு டிசம்பர் 22ல் பிறந்தார்.கும்பகோணத்தில்  கல்வி கற்கும் போது பூஜ்ஜியத்திற்கும் மதிப்பு உண்டு என கண்டறிந்து தனது ஆசிரியரை வியப்பில் ஆழ்த்தினார் .

*இந்திய அரசு 2012ம் ஆண்டு இவரது பிறந்த நாளை தேசிய கணித தினமாக அறிவித்தது போன்ற செய்திகளை மாணவர்களுக்கு கூறினார் முன்னதாக மாணவர்கள் செய்த கணித செயல்பாடுகளை காண்பித்து ,இந்த ஆண்டு அவரது 131 வது பிறந்த நாளில் 131 வடிவில் அமர்ந்து யோகாசனம் செய்தனர்


*இறுதியாக ஆசிரியர் குணசேகரன் நன்றி கூறினார்





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive