பானை மீது நடனம் ஆடி அரசுப்பள்ளி மாணவியர் சாதனைஒரு மணி நேரம் நடனமாடி, அரசு பள்ளி மாணவியர், சாதனை படைத்தனர்.கிருஷ்ணகிரியில் இயங்கி வரும், தேவி வரதாலயா நாட்டியப் பள்ளி சார்பில், அரசு பள்ளி மாணவியர் ஒரு மணி நேரம் நடனமாடி, சாதனை புரியும் நிகழ்ச்சி, அரசு ஆடவர் கலைக் கல்லுாரியில், நேற்று மாலை நடந்தது.இதில், அரசு பள்ளி மாணவியர், 350 பேர் பங்கேற்று, ஒரு மணி நேரம் நடனமாடி, சாதனை படைத்தனர். தொடர்ந்து, கரகம், கையில் தேசியக்கொடி, கைக்குட்டையுடன், பானை மீது, 209 மாணவியர், ஐந்து நிமிடங்கள் நடனமாடினர்.இதற்கான சான்றுகளை, 'யுனிவர்சல் புக் ஆப் ரெக்கார்டு' நிறுவனர், பாபு பாலகிருஷ்ணன், 'டிரெடிஷனல் புக் ஆப் ரெக்கார்டு' ஒருங்கிணைப்பாளர், கிருத்திகாதேவி ஆகியோர் வழங்கினர்.

Share this

0 Comment to "பானை மீது நடனம் ஆடி அரசுப்பள்ளி மாணவியர் சாதனை "

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...