Shopping!
ஃபேஸ்புக் நிறுவனம் வியாபார நிறுவனங்களுக்கென நேரலை வசதியை சோதனை செய்வதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த வசதியை கொண்டு வியாபார நிறுவனங்கள் தங்களது பொருட்களை நேரலை மூலம் தங்களது வாடிக்கையாளர்களுக்கு விளக்கி கூற முடியும்.
ஃபேஸ்புக் மார்கெட் லைவ்
ஃபேஸ்புக் தளத்தின் மார்கெட் பிளேஸ் அம்சம் உலகின் மற்ற பகுதிகளை விட தாய்லாந்தில் அதிகளவு பயன்படுத்தப்படுகிறது என ஃபேஸ்புக் அம்சங்களுக்கான மேளாலர் மயான்க் யாதவ் தெரிவித்திருக்கிறார். புது ஷாப்பிங் அம்சம் தாய்லாந்தில் தேர்வு செய்யப்பட்ட சில ஃபேஸ்புக் பேஜ்களில் மட்டும் தற்சமயம் சோதனை செய்யப்படுகிறது.
லைவ் ஷாப்பிங் அம்சத்திற்கான சோதனை தற்சமயம் நடைபெற்று வருகிறது. லைவ் ஷாப்பிங் விவரத்தை ஃபேஸ்புக் பேஜஸ் மூலம் வாடிக்கையாளர்களுக்கு தகவல் தெரிவிக்க முடியும்.
சாட்டிங் & ஷாப்பிங்
பயனர் விரும்பிய பொருட்களை அவர்களது சாதனத்தில் ஸ்கிரீன்ஷாட் எடுத்துக் கொண்டு பின், அதை வாங்கலாம். பயனர்கள் எடுத்து வைத்திருக்கும் ஸ்கிரீஷாட் படத்தை மெசஞ்சர் வழியே விற்பனையாளருக்கு அனுப்பி, சாட் செய்து பின் பண பரிமாற்றம் செய்து பொருளை வாங்கிக் கொள்ளலாம்.
இதன் மூலம் ஃபேஸ்புக் பேஜ்களில் இருப்பவர்கள் நேரலை வை உடனுக்குடன் பார்த்து, குறிப்பிட்ட பொருட்களை வாங்கலாமா, வேண்டாமா என்பதை முடிவு செய்து கொள்ள முடியும். தங்களுக்கு நேரலையில் வரும் பொருள் பிடித்திருக்கும் பட்சத்தில் மெசஞ்சரில் சாட் செய்து பொருளை வாங்கிக் கொள்ளலாம்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...