பட்டதாரி ஆசிரியர் பணிநிலையில் இருந்து முதுகலை ஆசிரியர்
( வரலாறு) பதவி உயர்வானது 2000 ஆம் ஆண்டு முதல் வெவ்வேறு பாடமாகப் பயின்றவர்களுக்கு 3 பங்கும் (75%) , ஒரே பாடமாகப் பயின்றவர்களுக்கு 1 பங்கும் (25%) வழஙகப்பட்டு வருகிறது.
( வரலாறு) பதவி உயர்வானது 2000 ஆம் ஆண்டு முதல் வெவ்வேறு பாடமாகப் பயின்றவர்களுக்கு 3 பங்கும் (75%) , ஒரே பாடமாகப் பயின்றவர்களுக்கு 1 பங்கும் (25%) வழஙகப்பட்டு வருகிறது.
இதனால் ஒரே பாடமாகப்
பயின்றவர்களுக்கு 2001-2002 ஆம் ஆண்டு வரை மட்டுமே பதவி உயர்வு
கிடைத்துள்ளதாகவும், வெவ்வேறு பாடமாகப் பயின்றவர்களுக்கு 2007 ஆம் ஆண்டு
வரையிலும் பதவி உயர்வு கிடைத்துள்ளது.
அரசாணை
நிலை எண் 266/பள்ளிக் கல்வி, நாள்: 12.07.2012 ன் படி அனைத்து
பாடஙகளுக்கும் சம அளவில் பணியிடங்கள உருவாக்கப்பட்டு நிரப்பப்பட்டுள்ளதை
அடுத்து வரலாறு பாட பட்டதாரி ஆசிரியர்களின் எண்ணிக்கை ஆயிரக் கணக்கில்
உயர்ந்து மற்ற பாட பட்டதாரி ஆசிரியர்களுக்கு இணையான எண்ணிக்கையில்
பணியாற்றி வருகின்றனர்.
எனவே,
வரலாறு பாட ஆசிரியர்களுக்கு மட்டுமே
வரலாறு முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு கொடுத்தால் கூட இன்னும் பல ஆண்டுகளுக்குக் கிடைக்க வாய்ப்பில்லை. ஏற்கனவே அதிக ஆண்டுகள் பணியாற்றியும் பதவி உயர்வு ஏதுமில்லாமல் பல ஆண்டுகளாகப் பணியாற்றிக் கொண்டிருக்கும் ஆசிரியர் தொகுதி வரலாறு பாட பட்டதாரி ஆசிரியர்கள் மட்டுமே ஆவர்.

இந்நிலையில்
மற்ற பாட ஆசிரியர்களுக்கு 75% பதவி உயர்வு வழஙகப்படுவது வரலாறு பாட
ஆசிரியர்களை வஞ்சிக்கும் செயல் எனவும், தற்போது புத்தகங்களில் உள்ள தரமான
மற்றும் அதிகமான பாடக் கருத்துக்களை அப்பாடத்தை மட்டுமே எடுத்து பயின்ற
ஆசிரியர்களால் மட்டும மாணவர்களுக்குக் கொண்டு செல்ல முடியும் எனவும் கருதி
முதுகலை ஆசிரியர் (வரலாறு) பதவி உயர்வினை வரலாறு பாட பட்டதாரி
ஆசிரியர்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும் என தருமபுரி மாவட்டத்தைச் சார்ந்த
வரலாறு பாட பட்டதாரி ஆசிரியர் திரு.ப.நடராசன் என்பாரின் தலைமையில் வழக்கு
தொடுக்கப்பட்டு தடையாணை பெறப்பட்டது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...