ஜாக்டோ - -ஜியோ போராட்டத்தில் பங்கேற்று, கைது செய்யப்பட்ட பேராசிரியர்கள், 18 பேரின் இடமாறுதல் உத்தரவை ரத்து செய்வது குறித்து, பரிசீலனை செய்யப்படும்

 

ஜாக்டோ - -ஜியோ போராட்டத்தில் பங்கேற்று, கைது செய்யப்பட்ட பேராசிரியர்கள், 18 பேரின் இடமாறுதல் உத்தரவை ரத்து செய்வது குறித்து, பரிசீலனை செய்யப்படும்,'' என, உயர்கல்வித் துறை அமைச்சர், அன்பழகன் தெரிவித்தார்.பாரதியார் பல்கலை பட்டமளிப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற பின், நிருபர்களிடம் கூறியதாவது:


 பாரதியார் பல்கலையில், புதிய துணைவேந்தர் தேடல் குழுவிற்கு, இரண்டு பேரை தேர்வு செய்துள்ளோம்.


 மூன்றாம் நபர் தேர்வு செய்யப்பட்டபின், புதிய துணைவேந்தர் விரைவில் தேர்வு செய்யப்படுவார். பதிவாளர் உள்ளிட்ட பல்வேறு காலி பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படும்


.போராட்டத்தில் பங்கேற்ற, 28 பேரில், 18 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது குறித்து கேட்டறிந்து, பின் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.


 இடமாறுதல் உத்தரவை, ரத்து செய்வது குறித்து பரிசீலிக்கப்படும்.கடந்த, 2011க்குப்பின், 56 கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகள் புதிதாக திறக்கப்பட்டுள்ளன.


 மேலும், 1,585 புதிய பாடப்பிரிவுகளும் தோற்றுவிக்கப்பட்டுள்ளன. அவசியம் இருப்பின் புதிய கல்லுாரிகள் துவக்கப்படும்.இவ்வாறு, அமைச்சர் அன்பழகன் கூறினார்.

Share this

0 Comment to "ஜாக்டோ - -ஜியோ போராட்டத்தில் பங்கேற்று, கைது செய்யப்பட்ட பேராசிரியர்கள், 18 பேரின் இடமாறுதல் உத்தரவை ரத்து செய்வது குறித்து, பரிசீலனை செய்யப்படும் "

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...