Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 26.02.19

திருக்குறள்


அதிகாரம்:அழுக்காறாமை

திருக்குறள்:170

அழுக்கற் றகன்றாரும் இல்லையஃ தில்லார்
பெருக்கத்தில் தீர்ந்தாரு மில்.

விளக்கம்:

பொறாமை கொண்டதால் புகழ் பெற்று உயர்ந்தோரும் இல்லை; பொறாமை இல்லாத காரணத்தால் புகழ் மங்கி வீழ்ந்தோரும் இல்லை.

பழமொழி

It is easier to destroy than to create

அழிப்பது சுலபம் ; ஆக்குவது கடினம்

இரண்டொழுக்க பண்புகள்

1.உள்ளதை உள்ளது என்றும் இல்லாததை இல்லை என்றும் சொல்வேன். அதற்கு மிஞ்சியது பொய் ஆகும் என அறிவேன்
2. இராணுவ வீரர்கள் மற்றும் விவசாயிகள் நம் நாட்டின் இரு கண்கள் எனவே அவர்களை மதித்துப் போற்றுவேன்.

பொன்மொழி

பெற்ற தாயை மதித்து போற்றுங்கள். தாயின் உள்ளத்தில் இல்லாத கடவுள் வேறெங்கும் இருக்க முடியாது.

     - திரு.வி.க

பொது அறிவு

1.உலக வன நாள் எப்போது கொண்டாடப்படுகிறது?

 மார்ச் 3

2. 2019 உலக வன நாள் கொண்டாடுவதன்
முக்கிய குறிக்கோள் என்ன?

 கடல்சார் உயிரினங்கள் பற்றிய விழிப்புணர்வு-   ஐ.நா. சபை அறிவிப்பு

தினம் ஒரு பாரம்பரிய உணவுப் பொருளின் மகத்துவம்

வாழை இலை* நாம் சூடான உணவுகளை இவ்விலையில் வைத்து பரிமாறும் போது அதில் ஒருவித மணம் தோன்றும். அதற்கு நம்முடைய பசியினை தூண்டும் செய்கை உண்டு. இதனால் தான் நாம் இவ்விலையில் சாப்பிட்டு வருகிறோம்.

* வாழை இலையில் தொடர்ந்து உணவு உட்கொண்டு வந்தால் தோல் பளபளப்பாகும். உடல் நலம் பெறும். மந்தம், வலிமைக்குறைவு, இளைப்பு போன்ற பாதிப்புகள் நீங்கும். அழல் எனப்படும் பித்தமும் தணியும்.

* வாழையிலை ஒரு கிருமி நாசினியாகும். உணவில் உள்ள நச்சுக் கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டது. இதனால் நோயின்றி நீண்ட ஆரோக்கியத்தை அளிக்கிறது.

 *வாழையிலையின் மேல் உள்ள பச்சைத் தன்மை (குளோரோபில்) உணவை எளிதில் சீரணமடையச் செய்வதுடன் வயிற்றுப் புண்ணை ஆற்றும் தன்மை கொண்டது. நன்கு பசியைத் தூண்டும்.

English words and Meaning

Example.   உதாரணம்
Examine. பரிசோதித்தல்
Expert.   . நிபுணர்,வல்லுனர்
Except     தவிர்த்து
Exit.         வெளிசெல்

அறிவியல் விந்தைகள்

கண்டு பிடிப்புகள் - கண்டு பிடிப்பாளர்
1. மின்சாரம் கண்டு பிடித்தவர் பெஞ்சமின் ஃபிராங்களின்
2. பெட்ரோல் கார் கண்டு பிடித்தவர் கார்ல் பென்ஸ்
3. டீசல் எஞ்சின் கண்டு பிடித்தவர் ருடால்ப் டீசல்
4. கணினி கண்டு பிடிப்பின் முன்னோடி அலன் டர்னிங்
5 முதல் கணினி கண்டு பிடித்தவர் சார்லஸ் பாப்பேஜ்.

Some important  abbreviations for students

* GPS   -  Global Positioning System

* GMT    -  Greenwich Mean Time

நீதிக்கதை

ராமுவும் மாரியும் நண்பர்கள். அவர்கள் இருவருக்கும், தாய், தந்தையர் மற்றும் சுற்றார் கிடையாது. இது போதாதென்று ராமுவுக்குக் கண் தெரியாது. அதேபோல் மாரியால் நடக்க முடியாது. அவர்கள் வாழ்ந்த கிராமத்தில் கிடைத்த வேலையைச் செய்து, கிராமத்தில் உள்ளோர் கொடுப்பதைச் சாப்பிட்டு வாழ்ந்து வந்தனர்.

ஒரு நாள் அவர்களுக்குச் சிறிது தொலைவில் உள்ள மற்றொரு ஊரில் நடக்கும் திருவிழா பற்றித் தெரிய வந்தது. இருவருக்கும் அங்கே போக மிகுந்த ஆசை. அந்த ஊருக்குச் செல்ல மிகுந்த தொலைவு நடக்க வேண்டும். மாரி சலிப்புடன் சொன்னான்” “என்னாலோ நடக்க முடியாது, உன்னாலோ பார்க்க முடியாது. இந்த லட்சணத்தில் நமக்கு ஏன் இந்த ஆசை?”

ராமு சிறிது நேரம் தீவிரமாக யோசித்து விட்டுச் சொன்னான்: “நண்பா! யோசித்துப் பார். உன்னால் நடக்கத்தான் முடியாது. ஆனால் கூர்மையாகப் பார்க்க முடியும். என்னால் பார்க்கத்தான் முடியாது. ஆனால் வெகுதூரம் நடக்க முடியும். நீ என் தோள் மேல் ஏறிக் கொள். எனக்கு வழியைச் சொல்லிக் கொண்டே வா. நாம் இருவரும் திருவிழாவிற்குச் சென்று வரமுடியும்”

ராமுவும் மாரியும் திருவிழாவிற்குச் சென்று வந்தார்கள்!!

1. நம் பலங்கள் எவை என்பதை எப்பொழுதும் உணர்ந்திருப்பது அவசியம். அவற்றைத் தகுந்த சமயத்தில் உபயோகிக்கத் தெரிய வேண்டியதும் அவசியம்

2. ஏன் நம்மால் ஒரு காரியத்தை சாதிக்க முடியாது என்று யோசிப்பதை விட, எப்படி சாதிக்க முடியும் என்று யோசிப்பது அதிகப் பயன் தரும்.

3. அடுத்தவர் பலங்கள் நமக்குப் பயன் தர வேண்டுமானால், அவர்களுக்குத் தேவையான நமது பலங்களின் பயன்களை அவர்களுக்கு அளித்து உதவத் தயங்கக்கூடாது

4. முயன்றால் முடியாதது எதுவுமில்லை.

இன்றைய செய்திகள்
26.02.2019

* சென்னை அரசு பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டத்தை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தொடங்கி வைத்தார்.

* கோடை காலம் தொடங்குவதால், தொழிற்சாலைகளில் தீத்தடுப்பு கருவிகள் கட்டாயம் இருக்க வேண்டும என்று மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

* தமிழகத்தில் இன்று 3 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் அதிகமாக வெப்பம் பதிவாகி உள்ளது. சேலத்தில் 102 டிகிரி, தருமபுரியில் 101 டிகிரி, திருத்தணியில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.

* இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றி இந்திய மகளிர் அணி அசத்தல்.

* இந்தியாவுக்கு  எதிரான முதல் டி20 ஆட்டத்தில் ஆஸ்திரேலியா கடைசி பந்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

Today's Headlines

* Governor Panwarilal Purohit initiated a breakfast delivery program in Chennai government schools.

* The pollutiin control board officials say that firefighting equipment should be compulsory in the fact that the summer season starts.

* In Tamil Nadu today, there are over 100 degrees Fahrenheit. 102 degrees in Salem, 101 degrees in Dharmapuri and 100 Degrees Fahrenheit heat in Tiruthani.

* Indian Women's team won the one-day series against England.

* Australia won the T20 match by 3 wickets in the last ball against India.

Prepared by
Covai women ICT_போதிமரம்
0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive