Best NEET Coaching Centre

Best NEET Coaching Centre

தம்மனூர் பள்ளியில் கல்விச் சீர் வழங்கும் விழா !

கல்விச் சீர் வழங்கும் விழா      

             வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் ஒன்றியம் தம்மனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கல்விச் சீர் வழங்கும் விழா 15.2.2019 அன்று சிறப்பாக நடைபெற்றது.திருப்பத்தூர் வட்டாரக் கல்வி அலுவலர் திரு.இரா.தென்னவன் தலைமையிலும் வட்டாரக் கல்வி அலுவலர் திரு M. உதயசங்கர் முன்னிலையிலும் நடந்தேறியது.     கல்விச் சீர் வழங்கும் விழாவில் பெற்றோர்கள் தலைவர்களின் படங்களையும், மாணவர் குறிப்பேடுகளையும் வழங்கினார்கள். பள்ளியின் ஆழ் துளை கிணற்றுக்கு ரூ.50000 மதிப்புள்ள மின் மோட்டார் மற்றும் பைப் வசதிகளை ஒரு வாரத்தில் செய்து தருவதாக பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளர் V.இரவிக்குமார் மற்றும்  பள்ளியின் முன்னால் மாணவர் S.கோவிந்தன் (கட்டிட காண்ராக்டர் )அவர் களும் உறுதி அளித்துள்ளனர். பள்ளியில் ஏற்கனவே 145 புரவலர்கள் உள்ள நிலையில் விழாவின் போது மேலும்  5 புரவலர்கள் தலா ரூ 1000/ -வீதம் கொடுத்து இணைந்தனர்.விழாவில் அனைத்து புரவலர்களுக்கும் சிறப்பு செய்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது.      மேலும் ஏற்கனவே protector வழங்கிய S.  இராஜேந்திரன் MA BL , அவர்களுக்கும்,ஒலிபெருக்கி வழங்கிய வெங்கடேசன் அவர் களுக்கும், குடிநீர் சுத்திகரிப்பு கருவி வழங்கிய .C L .சுகுமார் பூபாளம் ஜூவல்லரி அவர்களுக்கும் . தண்ணீர் டேங்க் வழங்கிய அன்பு எலக்ரிகல்ஸ் பாரதி அவர்களுக்கும் சிறப்பு செய்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது.    விழாவில் திருப்பத்தூர் மாவட்டக் கல்வி அலுவலர் திரு D.சிவா அவர்கள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார். பள்ளித் துணை ஆய்வாளர் திரு V .தாமோதிரன், பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளர் V.இரவிக்குமார் ,SMC தலைவர் சத்யா,PTA தலைவர் சிவக்குமார், ஆசிரியர்கள் ஆறுமுகம்,பாரதி , நம்பிராசன், கோபிநாதன், தண்டபாணி, அமைப்பாளர் T.M.தண்டபாணி மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.  வேதாச்சலம் த.ஆ 40 நோட்டுகளை மாணவர் களுக்கு வழங்கினார்.  பள்ளித் தலைமை ஆசிரியர் A.இரவிச்சந்திரன் அவர்கள் விழாவிற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்து அனைவரையும் வரவேற்று சிறப்பு செய்தார்.இறுதியில் ஆசிரியர் திருமதி R .இரமாதேவி அவர்கள் நன்றி கூற நாட்டுப் பண்ணுடன் இனிது நிறைவுற்றது.
0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive